சக்தியோடு இருந்தால் தான் சிவனால் அசைய முடியும் என்பர். ஒன்றும் செய்யாமல் இரு என்பதை ‘சிவனேன்னு கிட’ என்பார்கள். துடிப்போடு செயலில் ஈடுபடும் போது, ‘சக்தியோடு புறப்பட்டான்’ என்பதுண்டு. எழுத்தில் உயிர்,மெய் என இருவித எழுத்துக்கள் உண்டு. மெய்யெழுத்து சிவனுக்கும், உயிரெழுத்து சக்திக்கும் உரியவை. ‘சிவ’ என்றும் நாமத்திலுள்ள ‘ச்’ என்ற மெய்யோடு ‘இ’ என்ற உயிர் சேர்ந்ததால் ‘சி’ <உண்டானது. இதில் ‘இ’ என்னும் சக்தி எழுத்தே, சிவனுக்கு ஜீவனை அதாவது உயிரைத் தருகிறது. சவுந்தர்ய லஹரியில், ‘சிவனும் கூட, சக்தியான உன்னோடு கூடியிருந்தால் தான் பிரபஞ்சமே நடத்த முடியும். இல்லாவிட்டால், அவரால் துளி கூட அசைய முடியாது’ என்கிறார் ஆதிசங்கரர். ‘அம்மா இல்லாவிட்டால் ஐயாவுக்கு மதிப்பு ஏது?’ என்று பாமரர்களும் கூட, தங்கள் பேச்சில் குறிப்பிடுவதைப் பார்க்கலாம்.