தட்சிணாமூர்த்தி தனது இரு விரல்களை மடக்கி, மூன்று விரல்களை நீட்டிக்காட்டும் சின்முத்திரை உயர்வானது. சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்கள் இவரது காலடியில் இருப்பர். இவர்களுக்கு இந்த முத்திரை மூலம் உலகத் தத்துவத்தை இவர் உபதேசிக்கிறார். பெருவிரல் இறைவனையும், ஆள்காட்டிவிரல் உயிரையும் குறிக்கும். உலக உயிர்கள் (மனிதன்) பணிவுடன் இறைவனைச் சரணடைந்தால் நான் எனது என்ற பற்று நீங்கும் என்பது இதன் பொ ருள். ஆள்காட்டி விரலும், பெருவிரலும் சேர்ந்தால் வட்டம் உண்டாகும். இறைவனோடு சேர்ந்தால் மட்டுமே உயிர் முழுமை பெறும் என்பதையும் இது உணர்த்துகிறது.