மாசிமகம் நட்சத்திரம் அதிகாலை 3:30– 4.30மணிக்குள் இருக்குமானால் அது மிகவும் சிறப்பான அம்சம். இந்த நேரத்தில் பெண்கள் கருத்தரித்தால், பிறக்கும் குழந்தை யோகமுடையதாகவும், நல்ல குணவானாகவும் இருக்கும். இதை மனதில் கொண்டு தான் “மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்” என்பர். “மக” என்ற சொல்லுக்கு, “இளமை”, “குழந்தை”, “மகம், “இன்பம்” என்ற பொருள்கள் உண்டு. பொதுவாகவே, அதிகாலைப் பொழுதில் முதல் கர்ப்பம் தரிக்குமானால், அது நல்ல விஷயம் தான். அதிலும் மாசி மகம் நாளாக அமையுமானால் பாக்கியத்திலும் பாக்கியம் என்பர்.