Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சுகம் தரும் சுக்கிரன் கிருமிகளை அழிக்கும் புகை கிருமிகளை அழிக்கும் புகை
முதல் பக்கம் » துளிகள்
உலகின் 15 பெரிய கோயில்கள்
எழுத்தின் அளவு:
உலகின் 15 பெரிய கோயில்கள்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2018
03:04

1 அங்கோர்வாட் விஷ்ணுகோயில், கம்போடியா
*  கி.பி 1113 – 1150ல் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது.
162.6 ஹெக்டேர் பரப்பு கொண்டது.
* கம்போடியா நாட்டின் சின்னமாக உள்ளது.
* பள்ளிகொண்டநிலையில், இங்கு விஷ்ணு இருக்கிறார்.

2 ரங்கநாதர்கோயில், ஸ்ரீரங்கம்
* 108 திவ்ய தேசங்களில் முதல் தலம்.
* 156 ஏக்கர் பரப்பு கொண்டது.
* தென்னிந்தியாவின் பெரிய (239 அடி) ராஜ கோபுரம் இங்குள்ளது
* 21 கோபுரங்களும், 7 மதில் சுவர்களும் உள்ளன.

3 அக்‌ஷர்தம் கோயில், டில்லி   
* மகான் சுவாமிநாராயணருக்காக கட்டப்பட்டது.
* 23 ஏக்கர் பரப்பு கொண்டது.
* கருவறையில் 7 அடி உயர தங்கச்சிலை உள்ளது.
* ஆராய்ச்சி மையம், கண்காட்சி அரங்கம், 15 ஏக்கர் பூங்கா உள்ளன.

4 நடராஜர் கோயில், சிதம்பரம்
* பூலோக கைலாயமான இதுவே முதல் சிவத்தலமாகும்.
* 40 ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு சிவனின் ஐந்து சபைகள் உள்ளன.
* கனக சபையின் பொற்கூரை பராந்தக சோழனால் கட்டப்பட்டது.
* கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்கள் இடம் பெற்றுள் ளன.

5 பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்
* கி.பி.11ம் ¡Øறாண்டில் முதலாம் ராஜராஜ சோழன்  கட்டியது.
* 54 அடி சுற்றளவு, 23 அடி உயர பாணமுடன் மூலவர் இருக்கிறார்.
* 20 டன் எடையில் ஒரே கல்லால் ஆன நந்தி சிலை உள்ளது.
* தட்சிண மேரு என்னும் 216 அடி உயர விமானம் இங்குள்ளது.

6 அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை
* 24 ஏக்கர் பரப்பு, 6 பிரகாரம், 9 ராஜகோபுரமும் கொண்டது.
* கிழக்கு ராஜ கோபுரம் 216 அடி உயரம் கொண்டது.
* 142 சன்னிதி, 22 பிள்ளையார், 306 மண்டபங்கள் உள்ளன.
* திருக்கார்த்திகையன்று 2,668 அடி உயரத்தில் மகாதீபம் ஏற்றப்படும்.

7 ஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்
* கி.பி. 1509ல் கட்டப்பட்டது. பஞ்சபூதங்களில் மண்ணுக்குரிய தலம்.
* 25 ஏக்கர் பரப்பும், 190 அடி உயர கோபுரமும் கொண்டது.
* முக்தி தலங்கள் ஏழில் இதுவே முதன்மையானது.
* சிவலிங்கம் மண்ணால் ஆனதால் அபிஷேகம் கிடையாது.

8 வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சிபுரம்
* 23 ஏக்கர் பரப்பும், 180 அடி உயர கிழக்கு கோபுரமும் கொண்டது.
* இங்குள்ள கற்சங்கிலிகள், சிற்பக்கலைக்கு சான்று.
* குளத்திலுள்ள அத்திவரதருக்கு 40 ஆண்டுக்கு ஒரு முறை பூஜை
* இங்கு தங்கம், வெள்ளியாலான பல்லிக்கு சன்னதி உள்ளது.

9 ஜம்புகேஸ்வரர் கோயில், திருச்சி
* 18 ஏக்கர் பரப்பு கொண்ட இது பஞ்சபூதங்களில் நீருக்குரியது.
* கோச்செங்கட்சோழன் கட்டிய 70 சிவாலயங்களில் முதல் தலம்.
* தரை மட்டத்திற்கு கீழே மூலவர் இருப்பதால், கருவறையில்
எப்போதும் நீர் கசியும்.

10 நெல்லையப்பர் கோயில், திருநெல்வேலி
* 2000 ஆண்டு பழமை மிக்கது. 14 ஏக்கர் பரப்பு கொண்டது.
* தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய தேர் கொண்டது.
* நடராஜரின் ஐந்து சபைகளில் தாமிர சபை இங்குள்ளது.
* சிவனுடன் பள்ளிகொண்ட பெருமாளும் காட்சியளிக்கிறார்.

11 மீனாட்சியம்மன் கோயில், மதுரை
* 2 தங்கவிமானம், 14 கோபுரம் உள்ளன. தெற்கு கோபுரம் 170 அடி.
* நடராஜர் (வலதுகால் ஊன்றி) கால் மாறி, ஆடிய நிலையில் உள்ளார்.
* சிவன் 64 திருவிளையாடல் நிகழ்த்திய தலம்.
* தமிழகத்திலுள்ள 366 மீனாட்சியம்மன் கோயில்களின் மூலக்கோயில்.

12 வைத்தீஸ்வரன் கோயில், நாகப்பட்டினம்
* 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் உள்ளன.
* தங்கம், வெள்ளி கொடி மரங்கள் உள்ளன. செவ்வாய்க்குரிய தலம்.
* மருத்துவ கடவுளாக சிவன் அருள்புரியும் தலம்.
* திருச்சாந்து உருண்டை என்னும் மருந்து பிரசாதம் பிரசித்தம்.

13.தியாகராஜ சுவாமி கோயில், திருவாரூர்

* 30 ஏக்கர் பரப்பு கொண்டது. கிழக்கு கோபுரத்தின் உயரம் 98 அடி.  
* ஆசியாவிலேயே பெரிய ஆழித்தேர், 30 ஏக்கரில் கமலாலய குளம் உள்ளன.
* 9 ராஜகோபுரம், 80 விமானம், 13 மண்டபம், 3 பிரகாரம் இங்குள்ளது.
* 24 உட்கோயில்கள், 365 சிவலிங்கம், 86 விநாயகர் சன்னதிகள் உள்ளன.

14 ஜெகந்நாதர் கோயில், பூரி, ஒடிசா
* கங்கர் குலமன்னன் ஆனந்தவர்மனால் கட்டப்பட்டது.
* ஜகந்நாதர், பாலபத்திரர், சுபத்ரை மூவரும் மரச்சிற்பங்களாக உள்ளனர்.
* விழாவிற்காக 45 அடி உயர, 35 அடி அகலத்தில் புதிய தேர் செய்வர்.
* 12 ஆண்டுக்கு ஒருமுறை புதிய மூலவர்கள் மரத்தால் செய்யப்படுவர்.

15 லட்சுமி நாராயணன் கோயில், டில்லி
* 1939ல் ஜி.டி.பிர்லாவால் கட்டப்பட்டதால் பிர்லா மந்திர் என்பர்.
* பரப்பு 7.5 ஏக்கர். விஸ்வநாத் சாஸ்திரியால் நிர்மாணிக்கப்பட்டது.
* அனைத்து மதத்தினரையும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு காந்திஜி திறந்து வைத்தார்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar