பதிவு செய்த நாள்
23
ஏப்
2018
03:04
அக்காலத்தில் அஸ்வமேத, வாஜபேய, ராஜசூய யாகம் என பெரும் பொருட்செலவில் மன்னர்கள் யாகங்கள் நடத்தினர். காட்டில் வாழ்ந்த ரிஷிகளும் யாகத்தீ வளர்ப்பதை அன்றாட கடமையாக கொண்டிருந்தனர். தற்காலத்தில் கோயில் கும்பாபி÷åPத்தில் யாகசாலை பூஜை நடக்கிறது. புதுமனை புகுவிழாவில் கணபதி ÷íõ©ம், தொழில் தொடங்கும் போது லட்சுமி, சுதர்சன ÷íõ©ம் என வழிபாடு நடந்தேறும். இதில் இடப்படும் நெய், வஸ்திரம், பழங்கள் அந்தந்த தெய்வங்களுக்கு அக்னிபகவான் மூலம் சென்றடைவதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த ஆன்மிக காரணத்தோடு இதற்குள் அறிவியல் காரணமும் ஒளிந்திருக்கிறது. ÷íõமத்தில் இருந்து வரும் புகை, காற்றில் பரவியுள்ள நச்சுக்கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. யாகத்தீயில் இடும் நெய், பழங்கள், சமித்துகள்(சுள்ளிகள்) உண்டாக்கும் ரசாயன மாற்றத்தால் வாயு நாலாபுறமும் பரவும். இதை சுவாசித்தால் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, தலைவலி, குடல்புண் குணமாகும். நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதயம் பலம் பெறும். யாகசாலை முடிந்ததும் அந்த இடத்தில் யோகசானம் பயில்பவர்கள் பலரும் ஒன்றுகூடி மூச்சுப்பயிற்சி, தியானம் செய்வது பழங்காலத்தில் வழக்கத்தில் இருந்தது. மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட போபால் விஷவாயு விபத்தில் பலரும் இறந்த நிலையில், ஒரு குடும்பத்தினர் மட்டும் தப்பித்தனர். காரணம், அவர்கள் வீட்டில் தினமும் யாகம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்ததே. இத்தகவல் அப்போது பத்திரிகைகளில் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.