திருமண், திருநாமம் என்பது நாராயணனின் பாதங்களை குறிப்பதாகும். நாராயணன் ஒருவனே பரம புருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவன் .உடைமை என்பதே வைஷ்ணவ சித்தாந்தம். அவனே சகல ஜீவன்களையும் ஆள்பவன். அவன் பாதங்களை சிரசில் ஏந்துவது அடிமைக்கு சிறப்பு. அதனால் தான் ஸ்ரீராமர் பாதத்தை வைஷ்ணவர்கள் நெற்றியில் இடுகிறார்கள். இந்த திருநாமத்தில் நடுவில் இடும் சூரணம் மகாலட்சுமியை குறிக்கும். சூரணம் என்பது மண். உடல் மண்ணோடு மண்ணாக போவது என்பதை குறிக்கும் விதமாகவும் இதை அணிகின்றனர்.