இந்தியாவின் நான்கு திசைகளிலும் கோடித்தலங்களாக நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றை "சார்தாம் எனக் குறிப்பிடுவர். சார் என்றால் "நான்கு. "தாம் என்றால் "கோடி. தென்கோடியில் ராம்நாத் என்னும் ராமேஸ்வரமும், வடகோடியில் பத்ரிநாத், மேற்கில் சோமநாத், கிழக்கில் பூரி ஜெகந்நாத்தும் அமைந்துள்ளன. இதில் ராம்நாத்தும், சோம்நாத்தும் சிவன் கோயில்கள். பத்ரி நாத்தும், ஜெகந்நாத்தும் விஷ்ணு கோயில்கள்.