சிவபெருமானுக்கு ‘ஓம்’ என்னும் மந்திரத்தின் பொருளை உபதேசித்து சுவாமிநாதன் என பெயர் பெற்றவர் முருகப்பெருமான். தன்னை விட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது பெற்றவர்களுக்கு பெருமையாக இருக்கும். அந்த வகையில் தன் பிள்ளையிடமே மந்திரத்தின் பொருளைக் கேட்டு மகிழ்ந்தார் ஈசன். அதுவும் மகன் குருநாதராக வீற்றிருக்க, தான் ஒரு சீடனைப் போல மண்டியிட்டுக் கேட்டார். இதனால் முருகன் ‘அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா’ என்று போற்றப்படுகிறார். சிவகுருநாதனான முருகனை, குருவிற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபட்டால் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.