சிவனை முழுமுதல் கடவுளாக போற்றுபவை திருமுறைகள். சிவனடியார்கள் பாடிய இப்பாடல்களில் ஐந்து நூல்களை மட்டும் ‘பஞ்ச புராணம்’ என்று போற்றுவர். கோயில்களில் சிவனுக்கு அபிஷேக, ஆராதனையின் போது திருமுறைகளைப் பாட பொறுமையோ, நேரமோ நமக்கு இருப்பதில்லை. அதனால் ஓதுவார்கள் பஞ்சபுராணத்தையாவது பாட வேண்டும் என்னும் விதியை பெரியவர்கள் ஏற்படுத்தினர். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய நூல்களில் இருந்து ஒவ்வொரு பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடுவதே ‘பஞ்சபுராணம் ஓதுதல்’. ஐந்தெழுத்து மந்திர நாயகன் சிவனை பஞ்சபுராணம் என்னும் ‘அஞ்சு பாடல்’ பாடி வழிபட்டால் துன்பம் ‘பஞ்சு’ போல பறந்திடும்.