மகாபாரதத்தில் விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் உள்ளது. தர்மருக்கு பீஷ்மரால் உபதேசிக்கப்பட்டது இது. 150 ஸ்லோகங்கள் கொண்ட இதில் விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள் உள்ளன. சிவன், ராமன், கிருஷ்ணர், லலிதா சகஸ்ர நாமங்கள் என்று இருந்தாலும் விஷ்ணு சகஸ்ரநாமமே புகழ் பெற்றது. இதற்கு ஆதிசங்கரர், பராசரபட்டர், ராகவேந்திரர் மூவரும் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் தத்துவ நெறியில் உரை எழுதியுள்ளனர். பாரதப் போருக்கு முன் பகவத்கீதையை அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்தார். போர் முடிந்த பிறகு தர்மருக்கு சகஸ்ரநாமத்தை பீஷ்மர் உபதேசித்தார். அதை அப்போது கிருஷ்ணரும் கேட்டு மகிழ்ந்தார். பகவானைக் காட்டிலும் அவருடைய திருநாமத்திற்கு மகிமை அதிகம். ஏதாவது நன்மை கருதி விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஒரு மண்டலமாக 48 நாள் படிப்பர். அரை மண்டலமாக 24 நாள், கால் மண்டலமாக 12 நாள் பாராயணம் செய்யலாம். விஷ்ணு சகஸ்ரநாமத்தை பக்தியுடன் படிக்க நோய் தீரும். உடல்நலம் மேம்படும். முன்வினைப் பாவம் போக்கும் சக்தியும் இதற்குண்டு.