பதிவு செய்த நாள்
31
ஜூலை
2018
04:07
சிவபெருமானின் பஞ்ச குமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர். பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கும் பைரவர் என்பது பெயராயிற்று.
27 நட்சத்திரத்திற்குரிய பைரவர் கோயில்கள்:
வ.எண் - நட்சத்திரம் - பைரவர்கள் கோயில்
1. அஸ்வினி - ஞான பைரவர் - பேரூர்
2. பரணி - மகா பைரவர் - பெரிச்சியூர்
3. கார்த்திகை - அண்ணாமலை பைரவர் - திருவண்ணாமலை
4. ரோகிணி - பிரம்மசிரகண்டீஸ்வரர் - கண்டியூர்
5. மிருகசீரிடம் - ஷேத்திரபாலபைரவர் - ஷேத்திரபாலபுரம்
6. திருவாதிரை - வடுக பைரவர் - வடுகூர்
7. புனர்பூசம் - விஜய பைரவர் - பழனி
8. பூசம் - ஆசின பைரவர் - ஸ்ரீவாஞ்சியம்
9. ஆயில்யம் - பாதாள பைரவர் - காளஹஸ்தி
10. மகம் - ரத்தின பைரவர் - வேலூர்
11. பூரம் - பைரவர் - பட்டீஸ்வரம்
12. உத்திரம் - ஜ்வாலா மண்டல பைரவர் - சேரன்மகாதேவி
13. ஹஸ்தம் - யோக பைரவர் - திருப்பத்தூர்
14. சித்திரை - சக்கர பைரவர் - தர்மபுரி
15. சுவாதி - ஜடாமுனி பைரவர் - பொற்பனைக்கோட்டை
16. விசாகம் - கோட்டை பைரவர் - திருமயம்
17. அனுசம் - சொர்ண பைரவர் - சிதம்பரம்
18. கேட்டை - கதாயுத பைரவர் - திருவாவடுதுரை
19. மூலம் - சட்டைநாதர் - சீர்காழி
20. பூராடம் - வீர பைரவர் - அவினாசி
21. உத்திராடம் - முத்தலை வேல் வடுகர் - கரூர்
22. திருவோணம் - மார்த்தாண்ட பைரவர் - வைரவன்பட்டி
23. அவிட்டம் - பலிபீட மூர்த்தி - சீர்காழி
24. சதயம் - சர்ப்ப பைரவர் - சங்கரன் கோயில்
25. பூரட்டாதி - அஷ்ட புஜ பைரவர் - கொக்கரையான் பேட்டை
26. உத்திரட்டாதி - வெண்கல் ஓசை பைரவர் - சேஞ்ஞலூர்
27. ரேவதி - சம்ஹார பைரவர் - தாத்தையங்கார் பேட்ட.