பதிவு செய்த நாள்
20
ஆக
2018
03:08
வரலட்சுமி பூஜை செய்ய கீழ்க்கண்ட பொருட்களை தயார் நிலையில் வைத்திருங்கள். பிள்ளையார் பிடிக்க மஞ்சள் பொடி அல்லது பசுஞ்சாணம், வாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், பூக்கள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், கற்பூரம், பத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, விளக்குத்திரி, நல்லெண்ணெய், தாம்பாளம், கிண்ணம், கற்பூரத் தட்டு, மணி, தீப்பெட்டி.
பக்தி இருந்தால் போதும்: பூஜையறையில் கலசம் வைத்து விநாயகர் பூஜையுடன் விரதத்தை தொடங்க வேண்டும். சங்கல்பம், கலச பூஜை, பிராண பிரதிஷ்டை, தியானம், ஷோடச உபசாரம் (16 வகை பூஜை), லட்சுமி அஷ்டோத்ரம், பிரார்த்தனை, ஆரத்தி என அனைத்தையும் புரோகிதர் மூலம் வசதி உள்ளவர் நடத்துவர். வசதி இல்லாத வர்கள் லட்சுமி குறித்த பாடல்களை பாடி எளிமையாக நடத்துவர். மகாலட்சுமி எதிர்பார்ப்பது பக்தி மட்டுமே!