ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளியன்று சுமங்கலிகள் மேற்கொள்வது வரலட்சுமி விரதம். இந்நாளில் பூஜையறையில் மாக்கோலமிட்டு, மலர்களால் அலங்கரித்து வழிபட வேண்டும். நிறைகுடத்தில் தேங்காய், மாவிலை, லட்சுமியின் மஞ்சள் முகம் ஆகியவை வைத்து லட்சுமியை வழிபட வேண்டும். மகாலட்சுமி அருளால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.