’நானும் ஏறாத கோயில் இல்லை; கும்பிடாத சாமி இல்லை... இருந்தும் என்னமோ தெரியலை கல்யாணம் தள்ளிப் போய்க்கிட்டே இருக்கு...’ என்று தவிக்கும் சூழலில் இருக்கிறீர்களா? கவலை வேண்டாம். உங்களுக்கு நல்வழி காட்ட காத்திருக்கிறது நல்லாத்தூர். புதுச்சேரி - வில்லியனூர் சாலையில் 17 கி.மீ., தூரத்தில் உள்ள இத்தலத்தில் வரதராஜ பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு அருள்புரியும் பெருந்தேவி தாயாருக்கு 8 வெள்ளிக்கிழமை அல்லது 4 பஞ்சமி நாட்களில் அர்ச்சனை செய்து வழிபட விரைவில் திருமண யோகம் கைகூடும். தொடர்புக்கு: 98941 99562, 98430 61474.