பதிவு செய்த நாள்
25
செப்
2018
03:09
சிரஞ்சீவியாக இப்பூவுலகில் வாழ்ந்து வரும் தெய்வம் அனுமன். இவர் சஞ்சீவிமலையை தூக்கி ‘சஞ்சீவையா’என்றும், அஞ்சனையின் புதல்வன் என்பதால்ஆஞ்சநேயன் என்றும், வாயுபுத்திரன் என்பதால்‘மாருதி’ என்ற பெயரும் பெற்றவர். அனுமனுக்குஅர்ச்சுனசன், அமிதாராக்ரமன், மகாபவிஷ்டன், பிங்காட்சன், ராமேஷ்டன் என்ற பெயர்களும் உண்டு. கன்னட தேசத்தில் இவரை‘பிராணதேவர்’ எனவும், ஆந்திராவில், ‘ஆஞ்சநேயலு’எனவும், மகாராஷ்டிராவில்‘மாருதி’ எனவும் அதற்கும்வடக்கே ‘மகாவீர்’ எனவும்பக்தர்கள் பெயர்அழைக்கின்றனர்.கி.பி. 3ம் நுõற்றாண்டில் பல்லவ மன்னர்கள் அனுமனுக்கு சிறப்பான உருவங்களை அமைத்து வழிபட்டுள்ளனர். சோழர்கள் காலத்தில் இவருக்கு செப்புத்திருமேனிகள் (சிலைகள்) உருவாயின. விஜயநகர மன்னர்கள் அனுமன் உருவத்தை நாணயங்களில் அச்சிட்டு பெருக்கினர். இதில் விஜயராசர் என்பவர், அனுமனுக்கு இந்தியாவில் 732 இடங்களில் கோயில் எழுப்பியதாக வரலாறு உண்டு.
பிரசித்தி பெற்ற அனுமன் கோயில்களில், தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் ராஜ ராஜஸ்வரி அம்பாள் கோயிலில் உள்ள அனுமனும் ஒருவர். இங்கு 77அடி உயர அனுமன் கோயில் கொண்டுள்ளார். இவரை ‘விஸ்வரூப சுந்தரவரத ஆஞ்சநேயர்’ என்கின்றனர்.இவரது பீடத்தின் கீழ் கருவறையில், ஸ்ரீ ராம கோடி ஆஞ்சனேயர் எழுந்தருளி உள்ளார். இவர் வணங்கிய கரங்களுடன் எதிரே உள்ள ராமபிரானை வணங்குவது போல காட்சி தருவது சிறப்பாகும்.மார்கழி அமாவாசை அன்று இவருக்கு ஜெயந்தி விழா கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு மாதமும் மூல நட்சத்திர தினத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. கருவறை ஆஞ்சநேயருக்கு வியாழன் அல்லது சனிக்கிழமை வடை மாலை, துளசி மாலை அணிவித்து வணங்குவர். இக்கோயிலில், கடந்த 9ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இந்த அனுமனை வணங்கினால் புத்தி, புகழ், பலம், மன உறுதி, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்குவன்மை போன்றவைகளை பெறலாம். சூரிய பகவானிடம் பிரம்மோபதேசம் பெற்ற ஆஞ்சநேயர் அனைத்து கலைகளையும் கற்று தேர்ந்தார். அதனால் அவருக்கு “நவ வியாக்ரண வேத்தா” (இலக்கண வல்லுநர்) என்ற சிறப்பு பெயர் உண்டு. ராமபிரானே, சொல்லின் செல்வன் என்று பாராட்டிய பெருமை அவருக்கு உண்டு. அசோகவனத்தில் ராமனை பிரிந்துவாடிய சீதைக்கு ஆறுதல் அளித்த ஆஞ்சநேயரை நாமும் தெய்வச்செயல்புரம் சென்று வணங்கி வரலாம். விஸ்வரூப நிலையில் காட்சிதரும் அவர் அருளால் நம் வாழ்வு உயரும்.இருப்பிடம்: திருநெல்வேலி தூத்துக்குடி வழியில் 25 கி.மீ.,