நிலையான இன்பம் அடைய வேண்டும் என்பதே வாழ்வின் லட்சியம். இதை அடைய சாமவேதம் வழி ஒன்றைச் சொல்கிறது. ‘ஓம் விஷ்ணவே நமஹ’ என்னும் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். தேன் நிறைந்த பாத்திரம் போல விளங்கும் வேதப்பாடல்களை இசையோடு பாட வேண்டும். பகவத்கீதையில் ‘வேதானாம் ஸாமவேதோ அஸ்மி’ என்ற ஸ்லோகம் உண்டு. அதாவது, ‘வேதங்களில் நான் சாமவேதம்’ என்கிறார் கிருஷ்ணர். கடவுளையும், உலகிலுள்ள உயிர்களையும் இணைக்கும் ‘தத் த்வமஸி’ என்னும் மந்திரம் இந்த வேதத்தில் தான் இடம்பெற்றுள்ளது. ‘தத் த்வமஸி’ என்றால் ‘அந்த கடவுளாக நீயே இருக்கிறாய்’ என்று பொருள். சபரிமலை ஐயப்பன் மூலஸ்தான நுழைவுவாசலில்‘தத் த்வமஸி’ மந்திரத்தைக் காணலாம்.