தஞ்சாவூரில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது திருக்காட்டுப்பள்ளி. சிவனை பூஜிக்க விரும்பிய அக்னிதேவன் இங்கு குளம் வெட்டி தீர்த்தம் உருவாக்கியதால் சுவாமி ’அக்னீஸ்வரர்’ எனப்பட்டார். அம்மனுக்கு சவுந்தர்யநாயகி என்பது திருநாமம். மாசிமக விழாவிற்கு இங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள ’நாகாச்சி’ கிராமத்துக்கு சுவாமியும், அம்மனும் செல்வர். இப்பகுதியை ஆண்ட அரசன் நாகன் அம்மன் சிலை செய்து கொடுத்ததால், இக்கிராமம் அம்மனின் பிறந்த ஊராக கருதப்படுகிறது. இதனடிப்படையில் மாசிமகத்தன்று இவ்வூரில், பிறந்த வீட்டு சீதனமாக பொருட்கள் அனுப்பப்படுகிறது. திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் போது பசித்தால் சாப்பிட கட்டுச்சோறும் தரப்படுகிறது.