பதிவு செய்த நாள்
29
அக்
2018
03:10
விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து ஸ்நானம், ஸந்த்யாவந்தனம் நாம ஜெபம், குரு வந்தனம், பூஜை, ஸ்ரீமன் நாராயணீய ஸப்தாஹ பாராயணம், சுந்தர காண்டத்தில் ஒன்று அல்லது மூன்று ஸர்கங்கள், பிறகு 8.30 மணி முதல் 1.30 மணி வரை ஸ்ரீமத் பாகவதம் அல்லது ஸ்ரீமத் ராமாயணம் அல்லது ஸ்ரீமத் சுந்தர காண்ட முழு பாராயணம் மாத்யான்ஹிகம், ப்ரம்ம யக்ஞம், 1.30 மணி முதல் 2.00 மணி வரை ஆஹாரம், ஸ்ரமபரிஹாரம், பிறகு பகவன் நாம ஜபம், ஸ்ரீமத் பாகவத மனனம், ஸ்ரீமத் பகவத்கீதை, விஷ்ணு ஸஹஸ்ரநாமம், ஸாயம் ஸந்த்யாவந்தனம், சம்பு நடனாஷ்டக பாராயணம், இரவு 9.00 மணி வரையில் கேட்பவர்களுக்கு ஸ்ரீமன் நாராயணீயம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமன் ராமாயணம், சமஸ்க்ருதம் முதலியவற்றைக் கற்று கொடுப்பது மத்யானத்தில் இருந்து, இடையிடையே தன்னை சந்திக்க வரும் பக்தர்களுக்கு ஸ்ரீமந் நாராயணீயத்தில் ஒரு தசகம் சொல்லிவிட்டு தனக்கே உரித்தான கருணையுடன் உபதேசமும், கஷ்ட நிவர்த்திக்கு மார்கமும் சொல்லி வந்தார்.