மஹா பெரியவா பண்டரீபுரத்தில் இருந்ததால் 1981 ம் வருஷம் கோகுலாஷ்டமி ஸப்தாஹ பாராயண பிரவசனத்தை குருவாயூரில் புதுப் பெரியவா சாதுர்மாஸ்யம் செய்யும் இடத்தில் செய்யும்படி மஹா பெரியவா சொன்னதாக கண்டன், பாலு இருவரும் ஆங்கரை பெரியவரிடம் தெரிவித்தார்கள். மடத்தில் சில பேர் இவர்கள் சொன்னதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம், மஹா பெரியவாளை போய் நீங்கள் கேட்டால் பண்டரீபுரத்திலேயே செய்யும்படி சொல்லுவார்கள் என்றார்கள். அதற்கு ஆங்கரை பெரியவர் மஹா பெரியவாளிடம் உண்மையான பக்தி இருக்கிமேயானால், ‘பெரியவா நெருப்பில் விழும்படி சொன்னார் என்றால் விழுந்துவிட வேண்டும். பெரியவாளைப் பார்த்து கேட்டு தெரிந்து கொள்ளக்கூடாது. ஸ்ரீகண்டன் சொன்னால் மஹா பெரியவா சொன்னார் என்றுதான் நினைத்துக் கொள்ள வேண்டும். மேலும் பெரியவா ஸர்வ வ்யாபி, ஸர்வக்ஞர் என்று நாம் நம்பினால் அவர் எங்கு ஸப்தாஹம் நடந்தாலும் அங்கு வந்து கேட்க முடியும். நம் கண்ணுக்கு தெரிய மாட்டார். ஸர்வக்ஞராக இருப்பதால் ஸ்ரீகண்டன் சொன்னது அவருக்கு கண்டிப்பாக தெரியும்’ என்றார்.
மேலும் அவர் சொன்னது - ஸ்ரீமத் ராமாயணத்தில் ராமர் கைகேயிடம் ‘தகப்பனார் தசரதர் என்னை காட்டுக்குப் போகும்படி சொன்னார் என்று நீங்கள் (அல்லது வேறு யாராவது வந்து) சொன்னாலே நான் காட்டுக்குப் போவேன். அப்பா என்னை நெருப்பில் விழும்படி சொன்னார் என்று யாராவது என்னிடம் சொன்னால் அப்பாவிடம் சென்று விஜாரிக்காமல் நெருப்பில் விழுந்து விடுவேன், அதுதான் உண்மையான பித்ருபக்தி ’ என்று சொல்லியிருக்கிறார்.
ஆகையால் ஆங்கரை பெரியவர் குருவாயூரில் மட (ஞிச்ட்ணீ)-ல் (பார்த்தசாரதி கோயிலில்) ஸப்தாஹ பாராயண பிரவசனம் செய்தார். 4வது நாளன்று 103 டிகிரி ஜுரம் வந்து பாராயணம் செய்யவே சிரமப்பட்டார். கோகுலாஷ்டமிக்கு முதல் நாள் ஸப்தமி தினத்தில் (ஸப்தாஹத்தில் 6 வது நாள்) அவர் தாயாருக்கு சிரார்த்தம் வரும். அது நடக்க வேண்டும், பாராயணமும் நடக்க வேண்டும் என்ற மஹா பெரியவாளை வேண்டிக்கொண்டு பாராயணம் செய்தார்.
அந்த சமயத்தில் பண்டரீபுரத்தில் இருக்கும் மஹாபெரியவாளை தரிசிக்க (Nச்tடச்ண இச்ஞ்ஞு ணீணூணிணீணூடிஞுtணிணூ குணூடி ஙடிண்தீச்ணச்tடச் ஐதூஞுணூ) சென்றிருந்தார். அப்போது அவரிடம் எனக்காக ஆங்கரை கல்யாணராம பாகவதர் குருவாயூரில் ஸப்தாஹ பாராயண பிரவசனம் செய்து கொண்டிருக்கிறார். இன்று 4 வது நாள். அவர் ரொம்ப ஜுரத்தினால் கஷ்டப்பட்டுக் கொண்டு பாராயணம் நல்லபடியாக நடக்க வேண்டுமே, தாயார் சிராத்தமும் ஸப்தமி அன்று நடக்க வேண்டுமே என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறார். நீ இங்கு இருக்கும் பிள்ளையாருக்கு கொழுக்கட்டையை செய்து நிவேதனம் செய்து விட்டு மதறாஸ் போ. ஸ்ரீகண்டனிடம் கொழுக்கட்டையை செய்யச் சொல்ல வேண்டாம். நீயே செய்து நிவேதனம் செய் என்றார். அப்படியே செய்து விட்டு சென்றார். மதறாஸ் வந்தவுடன் ஆங்கரை பெரியவர் முகவரியை கண்டுபிடித்து அவராத்திற்கு வந்து, மஹா பெரியாவளை நாம் மனதில் நினைத்துக் கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் மஹா பெரியவா உங்களை நினைத்துக் கொண்டு உங்களுக்காக கொழுக்கட்டை செய்து நிவேதனம் செய்யும்படி பண்டரீபுரத்தில் என்னிடம் சொன்னார். என்ன பாக்யம் என்று கொண்டாடினார். ஆங்கரை பெரியவரை (Nச்தூடச்ண ஞிச்ஞூஞு ஙடிண்தீச்ணச்tடச் ஐதூஞுணூ) இப்போது தான் முதல் முதலாக நேரில் சந்திக்கிறார்.
இதிலிருந்து நம் ஸ்வாமிகள் கூறியபடி மஹாபெரியவா ஸர்வ வ்யாபி, ஸர்வக்ஞர் என்பது நமக்குப் புலப்படுகிறது. மேலும் மஹாபெரியவாளின் கருணையும் ஆங்கரை பெரியவர் மஹா பெரியவாளிடம் வைத்திருந்த பரம பக்தியின் பெருமையும் விளங்கும்.