பாலகனாக கிருஷ்ணர் இருந்த கோலத்தைக் பார்க்க ருக்மணிக்கு ஆசை எழுந்தது. தனது ஆசையை நிறைவேற்றும்படி தேவ சிற்பியான விஸ்வகர்மாவிடம் தெரிவித்தாள். அவரும் சாளக்ராம கல்லில், வலது கையில் தயிர் மத்தும், இடது கையில் வெண்ணெயும் வைத்த நிலையில் பாலகிருஷ்ணர் சிலை ஒன்றைச் செய்தார். அதனழகில் மெய் மறந்த ருக்மணி தினமும் பாலும், வெண்ணெய்யும் வைத்து பூஜித்து வந்தாள். துவாபர யுகத்தில் ருக்மணி பூஜித்த இச்சிலை தற்போது கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் உள்ளது.