ஆட்டு மந்தையை விரட்டிக் கொண்டிருந்தான் மேய்ப்பவன் ஒருவன். அதில் ஒரு குட்டியின் காலில் மட்டும் அடிபட்டிருந்தது. மற்ற ஆடுகளுடன் ஈடு கொடுத்து, அக்குட்டியால் ஓட முடியவில்லை. ஆனாலும் மேய்ப்பவன் இரக்கமின்றி அடித்தான். அங்கு நின்றிருந்த புத்தர் இதைக் கண்டு மனம் வருந்தினார். அக்குட்டியைத் தன் கைகளில் சுமந்து சென்று, மேய்ப்பவனின் குடிசை வரை விட்டு வந்தார். அப்போது,”ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்வதைக் காட்டிலும் எளிய உயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் போக்குவது மேலானது” என்னும் உபதேசத்தை வழங்கினார்.