கடவுள் நம்மை வழிநடத்துவதை ’ஆட்கொள்ளுதல்’ என்பர். ஒரு விஷயத்தை சரியென்று கருதி ஒருவர் ஈடுபட்டாலும், அதை வேண்டாம் என தடுத்துக் காப்பதை ’தடுத்தாட்கொள்ளுதல்’ என்று சொல்வர். நாயன்மாரில் ஒருவரான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டி சிவபெருமான் ஆட்கொண்டார். அதேபோல் மற்றொரு நாயன்மாரான சுந்தரரின் திருமணத்தின் போது ’இவன் எனது அடிமை’ என ஓலையைக் காட்டி தடுத்தாட்கொண்டார்.