நகை, பணம் போன்ற முக்கியமான பொருட்களை நாம் வீட்டில் எங்காவது வைத்து விட்டு தேடி அலைவதுண்டு. இதற்கு காவல் தெய்வமான அரைக்காசு அம்மனை வழிபட்டால் உடனடியாக பலன் கிடைக்கும். அரைக்காசு அம்மன் படத்தின் முன் வெல்லம், பொரிகடலை கலந்த கலவையை வைத்து, ”அரைக்காசம்மா! பொருளைக் கண்ணில் காட்டம்மா!” என்று வேண்டுங்கள். பொருள் நிச்சயம் கிடைத்துவிடும். மீண்டும் நன்றி தெரிவிக்கும் விதமாக அரைக்காசம்மனை வழிபட வேண்டும். அம்மன் படம் இல்லாவிட்டால் தலைவாசல் நிலைப்படியை சுத்தம் செய்து, அங்கு வெல்லம், பொரிகடலையை வைத்தும் வழிபடலாம்.