பூஜைப்பொருட்களில் வாழைப்பழம், தேங்காய் இடம் பெறும். மற்ற பழங்களைப் போல இவை சாப்பிட்ட மீதியில் இருந்தோ அல்லது பறவையின் எச்சத்தில் இருந்தோ முளைப்பதில்லை. நாம் சாப்பிட்ட பழங்களின் கொட்டைகளை மண்ணில் வீசினால், அது செடியாக முளைக்க வாய்ப்புண்டு. ஆனால், தேங்காயை சாப்பிட்டு விட்டு அதன் ஓட்டை வீசினாலோ, வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை எறிந்தாலோ அது முளைப்பதில்லை. தென்னை மரம் வளர முழு தேங்காயை தான் விதைக்க வேண்டும். வாழைமரத்திலிருந்து தான் புதிய வாழைக்கன்றும் வரும். தேங்காய், வாழைப்பழம் இரண்டும் எச்சில் படாதவை. தூய்மையான பொருட்களை வழிபாட்டில் படைக்கும் மரபை உருவாக்கிய நம் முன்னோர்களைப் போற்றுவோம்.