நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அபிராமி கோயிலில் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் (60, 80ம் கல்யாணம்) நடத்துவது வழக்கம். இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் திருக்கடவூர் மயானம் என்னும் தலம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் இருந்து தான், திருக்கடையூர் சிவனுக்கு அபிஷேகத்திற்கு தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. பங்குனி மாதம் அசுவினி நட்சத்திரத்தன்று மட்டும் பக்தர்களின் தலையில் தெளிப்பர். மற்ற நாட்களில் சுவாமிக்கு மட்டும் இத்தீர்த்தம் பயன்படுத்தப்படுகிறது.