பொருள்: பிறைசூடிய சிவனே என் தாய். எமனை வென்ற ஈசனே என் தந்தை. ஆலமரத்தடியில் தட்சிணாமூர்த்தியே எனக்கு ஆசான். மங்களத்தை அருளும் மகாதேவனே என் சகோதரன். திரிபுர சம்ஹாரம் செய்த ருத்ரனே எனக்கு உறவினர். கைலாய மலையின் அதிபரே என் தோழர். பரமேஸ்வரனே என் தெய்வம். அம்பிகையுடன் அருள்புரியும் உமாமகேஸ்வரா! உம்மை விட்டால் வேறு கதி எனக்கு இல்லை. சுபிட்சமாக வாழ நீயே அருள்புரிய வேண்டும்.