அம்பிகையின் கையில் சூலம் என்னும் ஆயுதம் இருக்கும். இது மூன்று பிரிவுகளை கொண்டது. எண்ணம், சொல், செயலை இது குறிக்கும். மனதால் எண்ணுவதை சொல்லவும், சொல்வதையே செய்யவும் வேண்டும். இதுவே சூலத்தின் தத்துவம்.படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலைக் குறிப்பதாகவும் திரிசூலத்தைச் சொல்வதுண்டு.