கோயில்களில் இருக்கும் மடப்பள்ளிக்கு போயிருக்கிறீர்களா? அடுப்பும், சமையல் பாத்திரங்களும் இறைந்து கிடக்கும். சமைக்கப்படும் இடம் என்றாலும் சில கோயில்களில் இங்கும் சன்னதி இருப்பதுண்டு. திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள இலத்தூர் மதுநாத சுவாமி கோயில் மடப்பள்ளியில் அன்னபூரணி சன்னதி உள்ளது. காசி போலவே தமிழகத்தில் அந்தக் காலம் தொட்டே அன்னபூரணி சன்னதி இங்கிருப்பது சிறப்பு.