ஆம். முதலில் ராமேஸ்வரத்தில் நீராடி ராமநாதசுவாமியை தரிசித்து கடல்நீரும், மணலும் எடுத்து காசிக்கு செல்ல வேண்டும். அங்கு மணலைக் கங்கையில் சேர்த்து விட்டு, கடல் நீரால் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கா தீர்த்தம் எடுத்து வந்து ராமேஸ்வரம் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் யாத்திரை முழுமை பெறும்.