Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வரதராஜப்பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி- பூதேவி
  ஊர்: சங்காணி
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பெருமாளுக்கு அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. குறிப்பாக வைகுண்ட ஏகாதசி ராப்பத்து, பகற்பத்து இங்கு சிறப்பு.  
     
 தல சிறப்பு:
     
  பெருமாளின் வலது கரத்தில் தன ஆகார்ஷன ரேகை உள்ளது  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சங்காணி வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சங்காணி - திருநெல்வேலி மாவட்டம்.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
 

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் வீரபாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் அழகான கோளவட்டம், சதுர வட்டம் எனப்படும் துவிதள விமானத் துடன் காட்சியளிக் கிறது.இந்த அமைப்பை மேலிருந்துபார்த்தால் அறுங்கோண வடிவில் அழகாக வடிவமைத்திருப்பார்கள்.



 
     
 
பிரார்த்தனை
    
  இவரை வணங்கினால் ஆணவம், மாயை, காமம், வெகுளி, மயக்கம், சாபம், நோய், பீடை, கண்திருஷ்டி போன்ற 19 வகையான தோஷங் கள் நீங்கி சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  குறைவில்லா வாழ்வு தரும் வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவியுடன் சர்வ அலங்காரத்தில் அருள்பாலிக் கிறார். பெருமாளின் வலது கரத்தில் தன ஆகார்ஷன ரேகை உள்ளதால், தன ஆகார்ஷன ரேகை உள்ள இவரது வலது கையில் பொன்னோ, பொருளோ வைத்து அதை வாங்கி சென்று நம் இல்லத்தில் வைத்தால் செல்வம் செழிக்கும் என்கின்றனர்.  
     
  தல வரலாறு:
     
  நாயக்கர் மன்னர் ஒருவர் இக்கோயிலின் பெருமையை அறிந்து தரிசனம் செய்ய விரும்பினார். அவரது அமைச்சர் அதற்கான விரிவான ஏற்பாடுகளை செய்தார். சங்காணி திருவிழாக்கோலம் பூண்டது. மன்னர் பெருமாளை தரிசிக்கும் நாள் நெருங்கி விட்டது. அர்ச்சகர் பரபரப்பாக பணிகளைக் கவனித்து வந்தார். மன்னர் வருவதற்கு முதல்நாள் நடை சாத்தி விட்டு, வீடு சென்றார். அதிகாலையில் எழ முயன்றார். முடியவில்லை. அர்ச்சகருக்கு கடுமையான காய்ச்சல். அவர் பெருமாளை நினைத்து,""பெருமாளே! இது என்ன சோதனை. நீதான் என்னை காப்பாற்ற வேண்டும்'' என வேண்டினார். காய்ச்சலின் வேகத்தில் மயங்கி விட்டார். மன்னர் கோயிலுக்கு வந்து விட்டார். அங்கே பெருமாளே அர்ச்சகராய் மாறி நின்றார். வரதராஜப்பெருமாளின் பெருமைகளை மன்னருக்கு எடுத்துரைத்ததோடு, மன்னரே வியக்கும் அளவுக்கு பாசுரங்களையும் பாடினார். பெருமாளின் அழகில் மயங்கியதோடு, பெருமாளின் பெருமையை சிறப்பாக எடுத்துக்கூறியதற்காக பொன்னையும், பொருளையும் அர்ச்சகருக்கு அள்ளி அள்ளி கொடுத்து சென்றார் மன்னர். இரண்டு நாள் உடல் குணமடைந்தவுடன் பணிக்கு பயந்து வந்த அர்ச்சகரை அங்கிருந்தவர்கள், பெருமையாக பேசினர். ""மன்னரை அசத்தி விட்டீரே,'' என்றனர். இறைவனே தனக்காக அர்ச்சகர் வேலை செய்துள்ளார் என மகிழ்ந்து, புகழ்ந்தார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் வலது கரத்தில் தன ஆகார்ஷன ரேகை உள்ளது
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar