Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வெங்கடாசலபதி
  உற்சவர்: ஸ்ரீ தேவி பூதேவி
  அம்மன்/தாயார்: பத்மாவதி
  தல விருட்சம்: புன்னை
  தீர்த்தம்: தெப்பக்குளம்
  புராண பெயர்: பர்பகுளம்
  ஊர்: கிருஷ்ணாபுரம்
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா - 11 நாள் திருவிழா, வைகுண்ட ஏகாதசி - அன்று 5 லட்சம் பக்தர்கள் கூடுவர். காணும் பொங்கல் தினம் அன்றும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களில் கோயிலில் விசேச அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும். வாரத்தின் சனி கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள சிற்பங்கள் உலக அளவில் புகழ்பெற்ற சிற்பங்களாக விளங்குவது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். மேலும் இங்குள்ள கற்சிலைகளை தட்டினால் வெண்கல ஓசை வரும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில் கிருஷ்ணாபுரம் - 627 759 திருநெல்வேலி மாவட்டம்.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
  இத்தலத்திற்கு அருகில் அகத்தீஸ்வரர் திருக்கோயில், காசிநாதசுவாமி திருக்கோயில், தென்னழகர்  திருக்கோயில், கிருஷ்ணசுவாமி திருக்கோயில், நீலமணிநாத சுவாமி திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  இத்தலத்து பெருமாளை வணங்குவோர்க்கு கல்யாணவரம், குழந்தை வரம் ஆகியவை கிடைக்கும். மேலும் வியாபார விருத்தி, குடும்ப சந்தோசம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பெருமளவில் வேண்டிக்கொள்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டு அதை நிறைவேற்ற முடியாதவர்கள் இத்தலத்தில் அந்த முடிகாணிக்கையை நிறைவேற்றுகிறார்கள். பத்மாவதி தாயாருக்கு பட்டு புடவை சாத்தியும், பால், பஞ்சாமிர்தம் படைத்தும், பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தலாம்.

பெருமாள் நின்ற கோலம்

கலை நுணுக்கம் வாய்ந்த உயிரோவியங்களாய் காட்சி தரும் 16ம் நூற்றாண்டு கருங்கல் சிற்பங்கள்.

வெண்கல ஓசை எழுப்பும் கற்சிலைகள்.

தென்திருப்பதியாக விளங்குகிறது. கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் என்றால் அவை உலக அளவில் புகழ்பெற்றது என்றே சொல்கிறார்கள். அத்தனை நுணுக்கமாகவும் அழகுணர்ச்சியோடும், கல்லும் பேசுமோ என வியக்க வைக்கும் அளவிற்கு சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. ஆண் பெண் அங்க உருவங்கள் அணிகலன்களோடு காண் போரை ஒரு நிமிடம் ஆச்சர்யத்திலும் பிரமிப்பிலும் ஆழ்த்தும்.
 
     
  தல வரலாறு:
     
 

16ம் நூற்றாண்டுக் கோயில் இது. கோயிலுக்கென்று புராண வரலாறு ஏதும் இல்லை என்றாலும் மிகச் சிறந்த சிற்ப கலைக் கூடமாக திகழ்கிறது. சிற்பி ஒருவன் பாறையை பார்க்கிறான்.அப்பாறையில் இயற்கையாக செந்நிற ரேகைகள் ஓடுவதை காண்கிறான். அந்த பாறையையும் அதில் ஓடிய செந்நிற ரேகைகளையும் சுற்றி சுற்றி அவன் எண்ணம் ஓடுகிறது.அவன் எண்ணத்தில் உருவான கற்பனை கதை எழ அதில் தன் உளி வேலையை காட்டுகிறது. பாறையைக் கண்ட சிவப்பு ரேகைகள் வீரனின் விலாவில் வடியும் இரத்தப் பெருக்காக அமைந்து விடுகின்றன. கல் உயிர் பெற்று விடுகிறது.அந்த சிலை வடிவை தூணாக நிறுத்தி விடுகிறான் சிற்பி. இத்தகைய சிறப்பு வாய்ந்ததுதான் கிருஷ்ணாபுரத்து கோயில் சிற்பங்கள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.



 
     
சிறப்பம்சம்:
     
  விஞ்ஞானம் அடிப்படையில்: இங்குள்ள கற்சிலைகளை தட்டினால் வெண்கல ஓசை வரும்.  
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar