|
அருள்மிகு செல்லி அம்மன் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
செல்லி அம்மன் |
|
ஊர் | : |
வடக்கு வாசல் |
|
மாவட்டம் | : |
திருநெல்வேலி
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
ஆடி வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி, கொடை விழா |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
மூலவர் செல்லியம்மன் அஷ்ட தஜ புஜங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு. |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 9 மணி முதல் 11 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு செல்லி அம்மன் திருக்கோவில்
வடக்கு வாசல், கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டம். |
|
| | |
|
போன்: | | | | | |
+91 9095878440, 9843939715. | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
கடையநல்லூரில் வடக்குக் பாகத்தில் வயல்களின் மத்தியில் உத்ர துவார பாலினி(வடக்கு வாசல் செல்லி) எதிரே நீலகண்டீஸ்வரி அம்பாள் என்ற நாமத்துடன் சக்தி சகோதரிகளாக, அஷ்ட தஜ புஜங்களுடன் தேவி பிரத்யேகமாக அருள்பாலிக்கின்றாள். |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள செல்லி அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக உருவம் செய்து கொண்டு வருவது இந்தக் கோயிலின் சிறப்பு. | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
அம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் தைமாதம் 3வது செவ்வாய்க்கிழமை கொடை நடத்தும் விழா நடைபெறும். ஊர் மக்களும், வெளியூரில் வாழும் பக்தர்களும் இணைந்து சீரும், சிறப்புமாக அம்மனின் விழாவை நடந்தி தேவியின் அருளைப் பெறுகிறார்கள். கொடைக்கு முதல்நாள் திங்கள்கிழமை அம்பாளுக்கு லலிதா சஹஸ்ர நாம லட்சார்ச்சனையும், கும்ப ஜெபமும், குங்குமம் அபிஷேகமும் நடைபெறும். மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் எல்லாவிதமதான அபிஷேகமும் சிறப்பான முறையில் செய்து நடைபெற்று, இரவு 11 மணிக்கு அம்பாள் சந்தன அலங்காரத்துடன் மிக அற்புதமாக காட்சி கொடுப்பாள். லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து சிறப்பு தீபாராதனை செய்வார்கள். இரவு 12 மணியளவில் கோயில் நித்ய பூஜை செய்யும் பூசாரி படையல் பூஜையை பிரமாதமாக செய்வார். அது சமயம் அம்பாள் பூசாரி மேல் இறங்கி கேட்டவர்க்கு கேட்ட வரங்களை அருளுவாள். அந்தக் காட்சியைக் கண்டு பக்தர்கள் பரவசமடைவார்கள்.
தாலாட்டு கொட்டு மேளம் முழங்க அம்பாள் பல்லக்கை பக்தர்கள் தூக்கிக் கொண்டு ஓடி வரும் அழகு தனிச் சிறப்பு. கையில் சூலமும், விபூதி கொப்பரையும் கொண்டு வந்து ஒவ்வொரு வீடாக மஞ்சள் நீரில் நிறை குடஅபிஷேகம் பெற்று கோயிலைச் சென்றடைவாள்.
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
அர்ச்சுனபுரி என்றழைக்கப்படும் கடையநல்லூரில் தேவேந்திரன் சாப விமோசனம் நீங்குவதற்காக இங்குள்ள கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, ஈசான திசையில் ஒரு குளம் வெட்டி அருணாசலேஸ்வரை பிரதிஷ்டை செய்தான். சிவனுக்கு வடபுறத்தே பத்ரகாளியை பிரதிஷ்டை செய்து சாபம் நீங்கி இந்திர பதவி அடைந்தார் என்பது புராண வரலாறு.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
மூலவர் செல்லியம்மன் அஷ்ட தஜ புஜங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|