காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வெயிலுகந்த அம்மன் திருக்கோயில்
கரிவலம்வந்தநல்லூர், திருநெல்வேலி.
போன்:
+91 99400 70007
பொது தகவல்:
விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், பைரவர், காளி, பேச்சியம்மன், நவக்கிரக சந்நிதிகளும் அமைந்துள்ளன. அருகில் பால்வண்ணநாதர் கோயில் (1 கி.மீ), சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயில்(8 கி.மீ) உள்ளன.
பிரார்த்தனை
மனக்கவலை விலகி நிம்மதி கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
வெயில் உகந்த அம்மன் என்பதை வேலுகந்த அம்மன் என்றும் சொல்வார்கள். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்கு சென்ற போது, அம்பாள் தனது சக்தியை வேலாக மாற்றி அவரிடம் கொடுத்தாள். வேலனுக்கு உகந்த வேலைக் கொடுத்ததால் அவள் வேலுகந்த அம்மன் ஆனாள். இதுவே வெயிலுகந்த அம்மனாக திரிந்தது என்பர்.
தல வரலாறு:
கரிவலம்வந்தநல்லூர் ஒரு காலத்தில் கருவை என அழைக்கப்பட்டது. இவ்வூரை ஆட்சி செய்த வீரபாண்டியனுக்கு வரதுங்க ராம பாண்டியன், அதிவீர பாண்டியன் என்று இரண்டு புதல்வர்கள். அப்போது, தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியனுக்கு புத்திரர்கள் இல்லை. எனவே, தனக்கு ஒரு புத்திரனை சுவீகாரம் செய்து தர வீரபாண்டியனுக்கு கோரிக்கை வைத்தான். வீரபாண்டியனும் தன் இளைய மகனை சுவீகாரம் கொடுத்து விட்டான்.பின் வரதுங்கன் ஆட்சிப்பொறுப்பேற்றான். அவனுக்கு சிவகாமசுந்தரி என்ற துணைவி. அவளுக்கு குழந்தைகள் இல்லை. எனவே அடுத்தடுத்து 27 பெண்களைத் திருமணம் செய்தான். ஆனாலும், புத்திர பாக்கியம் இல்லை. எனவே, கரிவலம்வந்த நல்லூரிலுள்ள பால்வண்ணநாதருக்கு பல பூஜைகள் செய்தான். அடுத்த பிறவியிலேனும் தனக்கு அந்த பாக்கியம் வேண்டுமென அவன், அவ்வூரிலுள்ள வெயிலுகந்த அம்பாளிடமும் வேண்டுகோள் வைத்தான். அவளும் நிறைவேற்றி தருவதாக வாக்களித் தாள்.