தமிழ் மாத கடைசி வெள்ளி, மஹா சிவராத்திரி, பங்குனி உத்திரம், அமாவாசை, பௌர்ணமி
தல சிறப்பு:
சாஸ்தா இத்தலத்தில் பட்டமுடையார் சாஸ்தா என்ற திருநாமத்துடன் எழுந்தருளுகிறார். பட்டமுடையார் சாஸ்தாவின் சன்னதிக்கு பின்புறம் மரத்தின் அடியில் பொங்குமுடையார் சாஸ்தா அருள்பாலிக்கிறார். சாஸ்தாவுக்கு காவலாக கருப்பசாமி, பூதத்தான், பேச்சியம்மன், கரடிமாடன், கசமாடன், மாடன் மாடத்தி, பிரம்மராட்சஸி மற்றும் பல தெய்வங்களும் உள்ளனர்.
திறக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
முகவரி:
அருள்மிகு ஸ்ரீ பட்டமுடையார் சாஸ்தா திருக்கோவில்
நாகல்குளம், ஆலங்குளம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்.
போன்:
+91 98420 96236
பொது தகவல்:
விநாயகர்,பட்டமுடையார் சாஸ்தா, பொங்குமுடையார் சாஸ்தா, கருப்பசாமி, பூதத்தான், பேச்சியம்மன், கரடிமாடன், கசமாடன், மாடன் மாடத்தி, பிரம்மராட்சஸி ஆகிய தெய்வங்கள் உள்ளன.
பிரார்த்தனை
இங்கு அமைந்துள்ள பட்டமுடையார் சாஸ்தாவை வேண்டினால் நினைத்தது நிறைவேறும்,திருமண தடைகள் விலகும். இங்குள்ள காவல் தெய்வங்களான கருப்பசாமி, பூதத்தான், பேச்சியம்மன், கரடிமாடன், கசமாடன், மாடன் மாடத்தி, பிரம்மராட்சஸி ஆகிய தெய்வங்களை வணங்கினால் தொழில் விருத்தி பெறும்.குழந்தை பேறு கிடைக்கும். பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி ஆகியவற்றில் இருந்து விடுபடலாம்.
பட்டுப்போன மரம் தழைத்து வளர்ந்ததால் மூலவர் பட்டமுடையார் சாஸ்தா என அழைக்கப்படுகிறார். சாஸ்தாவின் சன்னதிக்கு பின்புறம் உள்ள அந்த மரத்தின் அடியில் பொங்குமுடையார் சாஸ்தாநாளுக்கு நாள் பூமியில் இருந்து வளர்ந்து கொண்டே வருவது.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் ஆங்கிலேயர் ஒருவர் இத்தலத்திற்க்கு வருகை தந்து சாஸ்தாவின் சக்தியை சோதிக்க விரும்பினார். அப்போது அங்குள்ள பட்டுப்போன ஒரு மரத்தை பார்த்து இந்த பட்டுப்போன மரம் தழைத்து வளர்ந்தால் சக்தி இருப்பதை ஒத்துக்கொள்வது மட்டுமல்லாமல் கோவில் இருக்கும் இடத்தை கோவிலுக்கு எழுதிக்கொடுப்பதாகவும் கூறினார். சில நாட்கள் கழித்து மீண்டும் ஆங்கிலேயர் வரும்பொழுது பட்டுப்போன அந்த மரம் பச்சை பசேலென தழைத்து காட்சி அளித்தது. அதைக்கண்டு அவர் முன்பு கூறிய படியே சாஸ்தாவின் சக்தியை புரிந்து கொண்டு கோவில் இருக்கும் இடத்தை கோவிலுக்கே எழுதிக்கொடுத்தார். பட்டுப்போன மரம் தழைத்து வளர்ந்ததால் மூலவர் பட்டமுடையார் சாஸ்தா என அழைக்கப்படுகிறார். பட்டமுடையார் சாஸ்தாவின் சன்னதிக்கு பின்புறம் உள்ள அந்த மரத்தின் அடியில் பொங்குமுடையார் சாஸ்தா அருள்பாலிக்கிறார். இவர் சக்தி வாய்ந்த சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் நாளுக்கு நாள் பூமியில் இருந்து வளர்ந்து கொண்டே வருவதை நாம் இப்பொதும் காணலாம்.