குடும்பப் பெண்கள் ஸ்லோகம், மந்திரம் சொல்லியபடி அன்றாட சமையலில் ஈடுபடுவர். இடையில் சுவாமிக்கு பூ சாத்துதல், நைவேத்யம் செய்தல், தீபம் காட்டுதலையும் செய்து முடிப்பர். தெய்வீக சிந்தனையுடன் சமைக்கப்பட்ட உணவால், அதை உண்பவருக்கும் பக்தி உணர்வு ஏற்படும். அதனால் குடும்பமே கோயில் போல பொலிவுடன் திகழும். இந்த விஷயத்தை ‘துஞ்சலும் துஞ்சல் இலாத போதும்’ ‘இடரினும் தளரினும்’ என்று தொடங்கும் தேவாரப் பாடல்களில் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். எனவே வீட்டு வேலைக்கு இடையே ஸ்லோகம் சொல்வது நல்லது.