Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்பதியில் உள்ள ஐந்து ... குறை தீர்க்கும் ஆராய்ச்சி மணி குறை தீர்க்கும் ஆராய்ச்சி மணி
முதல் பக்கம் » துளிகள்
சிவனுக்கு வெந்நீர் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
சிவனுக்கு வெந்நீர் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2020
03:06

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகா புரத்தில் பெரியநாயகி சமேத கனககிரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சுவாமிக்கு  அபிஷேகம் செய்த வெந்நீர் நோய் தீர்க்கும் பிரசாதமாக தரப்படுகிறது.  ஒருமுறை பிருங்கி முனிவர் கைலயாய மலைக்கு வந்திருந்தார். அப்போது சிவனும், பார்வதியும் உரையாடிக் கொண்டிருந்தனர். பார்வதியை பொருட்படுத்தாத முனிவர், சிவனை மட்டும் வணங்கினார். இதனைக் கண்டு வருந்திய பார்வதி, ‘‘ சுவாமி! உங்கள் உடலில் எனக்கு பாதியை தாருங்கள். இதனால் உங்களை வணங்குவோர் என்னையும் வணங்குவர்’’ என்றாள். அதற்கு சிவன், ‘‘நீ பூலோகம் சென்று காஞ்சிபுரத்தில் காமாட்சி என்ற பெயரில் தவமிரு. உரிய காலத்தில் உன்னை மணப்பேன். பின்பு திருவண்ணாமலைக்கு வந்து என்னை வழிபடு. அப்போது என் உடம்பில் இடப்பாகத்தை அளிக்கிறேன்’’ என உறுதியளித்தார்.

அதன்படி பார்வதி காஞ்சிபுரத்தில் காமாட்சியாக தவம் செய்து ஏகாம்பரேஸ்வரரை மணந்தாள். பின்பு திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள  48 நாட்கள் இத்தலத்தில் தங்கினாள்.  தேவி தங்கியதால் ‘தேவிகா புரம்’ எனப் பெயர் பெற்றது.  காஞ்சிபுரத்தில் காமாட்சிக்கு தனி கோயில் இருப்பது போல, இங்கும் அம்மன் பெரியநாயகி என்ற பெயரில் தனிக்கோயில் வீற்றிருக்கிறாள். கோயிலின் பின்புறம் 500 அடி உயரமும், 5 கி.மீ. சுற்றளவும், 302 படிகளும் கொண்ட கனககிரி என்னும் மலை உள்ளது. இதன் உச்சியில் சுயம்பு மூர்த்தியாக கனக கிரீஸ்வரர் என்னும் பெயரில் சிவன் இருக்கிறார். கருவறையில் சுவாமிக்கு அருகில் காசி விஸ்வநாதர் இருக்கிறார்.   ஒருமுறை வேடன் ஒருவன் மலையில் கிழங்கு அகழ்ந்தெடுக்க முயன்ற போது ரத்தம் பீறிட்டது. அங்கு சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். சுவாமிக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு வெந்நீரால் அபிேஷகம் செய்து பிராயச்சித்தம் தேடினான்.  இதனடிப்படையில் திங்கட்கிழமை தோறும் சுவாமிக்கு வெந்நீர் அபிஷேகம் நடக்கிறது. இத்தீர்த்தத்தை அருந்தினால் நாள்பட்ட நோயும் பறந்தோடும். மலையில் 48 நாட்கள் தங்கியிருந்து பார்வதி தவம் செய்ததன் அடையாளமாக மலை மீது அம்மனின் திருவடி உள்ளது.


செல்வது எப்படி
* திருவண்ணாமலையிலிருந்து ஆரணி செல்லும் வழியில் 51 கி.மீ,
* சென்னையில் இருந்து 160 கி.மீ.,

தொடர்புக்கு:
94424 70477,  99525 76444

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar