பெருமாளுக்குரிய விரதங்களில் முக்கியமானது புரட்டாசி சனி. புரட்டாசி சனியும், திருவோண நட்சத்திரமும் கூடிய நாளில் மகாவிஷ்ணு பூலோகத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாளாக அவதரித்தார். இதனடிப்படையில் பக்தர்கள் புரட்டாசி சனி விரதமிருக்கின்றனர். இவர்கள் சனிக்கிழமை காலையில் திருப்பதி பெருமாளுக்கு விளக்கேற்றி துளசி தீர்த்தம் வைத்து வழிபடுவர். தீர்த்தம் சிறிது அருந்தி விட்டு நாலாயிர திவ்ய பிரபந்தம், வெங்கடேச ஸ்தோத்திரங்களைப் படிப்பர். மதியம் உணவு சாப்பிட்டு விரதம் முடிப்பர். மாலையில் பெருமாள் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றுவர். வசதி உள்ளவர்கள் புரட்டாசி கடைசி சனியன்று பெருமாளை வழிபட்ட சர்க்கரைப் பொங்கல், புளியோதரை தானம் அளிப்பர். இந்த ஆண்டு செப்.19, 26, அக்.3, 10 ஆகிய நான்கு சனி வருகிறது. இந்நாட்களில் விரதமிருந்தால் நோய் தீரும். லட்சுமி கடாட்சம் பெருகும். திருமணத்தடை, கிரக தோஷம் அகலும்.