அலைகடலில் பிறந்ததால் மகாலட்சுமிக்கு அலைமகள் என்று பெயர். கடலில் விளையும் உப்பு லட்சுமியின் அம்சமாகும். உணவுக்கு மட்டுமல்ல, உறவுக்கும் சுவை சேர்ப்பது இதுவே. இதனால் கிரகப்பிரவேசத்தின் போது, உறவினர்கள் மஞ்சளுடன், உப்பும் கொண்டு வருவர். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பதும் இதனால் தான். உப்பை யாரும் கடனாக வாங்க கூடாது. வீட்டில் உப்பு இல்லாமல் இருப்பது கூடாது. உப்பை வீணாக்கினால் வீண் செலவு வரும். கோயில் குளத்தில் உப்பும், மிளகும் இட்டால் உடல்நலம் சிறக்கும்.