சரஸ்வதி பூஜைக்கு முதல் நாள் வாசல், நிலைகளை சுத்தப்படுத்தி அழகுபடுத்த வேண்டும். கல்விக்குரிய புத்தகம், பேனா, பென்சில், வீட்டு உபயோகத்தில் உள்ள அரிவாள்மனை, கத்தி, விவசாயத்திற்குரிய மண்வெட்டி, கலப்பை ஆகியவற்றுக்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜையறையில் வைக்க வேண்டும். பசுஞ்சாணத்தில் விநாயகர் பிடித்து அருகம்புல் சாத்தி வைத்து அவல், பொரி, சுண்டல் படைத்து தீபாராதனை செய்ய வேண்டும். மறுநாள் விஜயதசமியன்று மீண்டும் பூக்கள் சாத்தி, பால் நைவேத்யம் செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.