Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மேஷம்: உழைப்பே உயர்வு தரும் மிதுனம் :  பொறுத்தார் பூமியாள்வார் மிதுனம் : பொறுத்தார் பூமியாள்வார்
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (17.1.2023 முதல் 29.3.2025 வரை)
ரிஷபம் : சௌபாக்கியம் தரும் சனி
எழுத்தின் அளவு:
ரிஷபம் : சௌபாக்கியம் தரும் சனி

பதிவு செய்த நாள்

12 டிச
2020
04:12

கார்த்திகை 2, 3, 4ம் பாதங்கள் : பொது : ‘அஷ்டமத்துச் சனி’எனும் கஷ்டமான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு உள்ளீர்கள். எட்டாம் இடமான விரய ஸ்தானத்திலிருந்து விலகி ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தில் பாக்யாதிபதி சனி பகவான் அமர இருப்பது ஓரளவிற்கு நற்பலன்களை உண்டாக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக பட்ட சிரமங்களுக்குப் பரிகாரமாக வரவிருக்கும் கால நேரம் அமையும். பொதுவாக ஒன்பதாம் இடத்துச் சனியினால் தனலாபக் குறைவு, எதிரிகள் வலுப்பெறுதல், அடுத்தவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலை ஆகியவற்றை பலன்களாகத் தருவார். ஆயினும் ரிஷப ராசிக்காரர்களைப் பொறுத்த வரை சனி பகவானே பாக்யாதிபதியாக அமைவதால் மேற்சொன்ன பலன்கள் மாறி சுபபலனே கிட்டும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நிதி : தான, தருமங்களுக்காக கூடுதலாக செலவழிக்க உள்ளீர்கள். ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோர்க்கு உதவுதல் போன்ற காரியங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் இறங்க உள்ளதால் பொருட்செலவு என்பது தவிர்க்கமுடியாதது ஆகிவிடும். இந்நிலையில் தனலாபக்குறைவு என்ற பலன் உண்டானாலும் பெயரும், புகழும் சேரும். அமைதியான முறையில் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் பொருள் சேமிப்பில் ஈடுபடுவது நன்மை தரும். கடன்பட்டாவது அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வது நல்லது. சொத்துக்களை விருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஸ்திரமாகப் பதிய வேண்டும். அப்போதுதான் நாம் செய்து வரும் தானதர்மங்கள் பிற்காலத்திலும் தொடரும் என்பதை நினைவில் கொள்ளுதல் அவசியம்.

குடும்பம் : குடும்பத்தில் பிரச்சினைகள் உருவாகும்போது நம் மீது தவறில்லை என்றாலும் கூட அடங்கிப் போதல் நன்மை பயக்கும். இதனால் அனாவசிய அவமானத்தினைத் தவிர்க்கலாம். சிறு சிறு பிரச்சினைகளிலும் அதிகம் தலையிடாமல் அமைதி காப்பது நன்மை தரும். மனக்கவலைகளை மனதிலேயே பூட்டி வைத்துக்கொள்ளாமல் வாழ்க்கைத்துணையிடம் உங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதால் மனதில் தெளிவு பிறக்கக் காண்பீர்கள். உறவினர்களால் தோன்றும் குழப்பங்களை மிகைப்படுத்தாது அப்படியே விட்டுவிடுவது நல்லது. பூர்வீக சொத்துக்களில் புதிய வில்லங்கங்கள் தோன்றும் வாய்ப்பு உண்டென்பதால் உடன்பிறந்தோருடன் சற்று கவனத்துடன் பேச வேண்டியது அவசியம்.


கல்வி : மாணவர்கள் கல்விநிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். படிக்க வேண்டிய நேரத்தில் மனம் ஒருமுகப்படாது அங்குமிங்கும் அலைபாயும். இந்நிலையைத் தவிர்க்க முடிந்தவரை தனிமையத் தவிர்த்துவிட்டு நண்பர்களோடு கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது நன்மை தரும்.

பெண்கள் : பிள்ளைகளால் உங்கள் கௌரவம் உயரக் காண்பீர்கள். மற்றவர்களால் செய்ய முடியாத காரியத்தினை பிள்ளைகள் செய்து முடித்திருக்கிறார்கள் என்று பெருமை கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் உறவினர்களுக்கு உதவி செய்ய நேரிடும். பெற்றோரின் உடல்நிலையில் அவ்வப்போது சிறப்பு கவனம் கொள்வது அவசியம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் சுப நிகழ்வு ஒன்று குடும்பத்தில் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு.

ஆரோக்யம் : முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தாது மனதில் பூட்டி வைத்துக் கொள்வதால் உடல்நிலையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், சர்க்கரை வியாதிக்காரர்கள் தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கண்நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் ஒரு சிலர் அவதிப்பட நேரிடும்.

தொழில் : 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்திற்கு 12ல் சனி பகவான் மறைவதால் தொழில் ரீதியாக பல்வேறு இடைஞ்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும். தொழில்முறையில் கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். உத்யோகஸ்தர்கள் அடிக்கடி தற்காலிக பணி இடமாற்றத்தினை சந்தித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் பதவி உயர்விற்காக சிறப்புப் பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி பயிலுதல் ஆகியவற்றில் நாட்டம் கொள்வார்கள். வியாபாரிகள் தொழிலை அபிவிருத்தி செய்ய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக அலைய வேண்டியிருக்கும். தொழில்முறையில் கஷ்டப்பட வேண்டிய நிலை உண்டாகுமே தவிர, நஷ்டப்பட வேண்டியிருக்காது. உங்களுக்கு வரவேண்டிய லாபம் என்பது சீரான முறையில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.

பரிகாரம் : சனிதோறும் சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்து வாருங்கள்.

ரோகிணி : பொது : குருப்பெயர்ச்சியின் சாதகமான பலன்களைக் காணத் துவங்கியிருக்கும் உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியும் புத்துணர்ச்சியைத் தரும் வகையில் அமையும். ஆன்மிக ஈடுபாடுகள், தர்ம சிந்தனைகள் ஆகியவை மனதில் குடிபுகும். பெரியவர்களின் கருத்துக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துச் செயல்பட்டு வருவீர்கள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று கடமையைச் செய்து வருவதில் தயக்கமில்லாது செயல்பட வேண்டியிருக்கும். அடுத்தவர்களின் பிரச்சினையில் தலையிடாது அமைதி காப்பதன் மூலம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சுயநலவாதி என்ற பெயரினை அடையக்கூடும். ஆயினும் உணர்ச்சிவசப்படாமல் அமைதி காப்பதன் மூலம் உங்களின் உண்மை நிலையை அவர்களுக்கு புரிய வைக்க இயலும்.

நிதி : பொருளாதார நிலை சீரான முன்னேற்றம் கண்டு வரும். கடன்பட்டாவது அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வது நல்லது. எதிர்கால சந்ததியினருக்காக சொத்துக்களை உருவாக்கும் முயற்சியில் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். தன்னலமற்ற பொதுக்காரியங்களில் முன்நின்று செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். தான, தருமங்களுக்காக கூடுதலாக செலவழிக்க நேரலாம். ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோர்க்கு உதவுதல் போன்ற காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும்.

குடும்பம் : உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். அவர்களது துணையுடன் பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்படுவீர்கள். பிள்ளைகளின் செயல்களில் முன்னோர்களின் சாயலைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். அவர்களது ஆலோசனையின் பேரில் செய்யும் காரியங்கள் முழுமையான வெற்றியைப் பெற்றுத் தரும். வாழ்க்கைத்துணையுடன் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு உங்கள் செயல்களை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். அவரது வழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். உறவினர்களால் குடும்பத்தில் உண்டாகும் பிரச்சினைகளை பெரிதுபடுத்தாது அப்படியே விட்டுவிடுவது நல்லது.

கல்வி : மாணவர்கள் கல்விநிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். படிக்க வேண்டிய நேரத்தில் மனம் ஒருமுகப்படாது அங்குமிங்கும் அலைபாயும். தேர்வு நேரத்தில் வினாக்களுக்கு உரிய சரியான விடை பிடிபடாமல் போகலாம். இந்நிலையினை தவிர்க்க சரியான குறிப்புகளுடன் விடைகளை எழுதி பழகிக் கொள்வது நல்லது. குரு பகவானின் துணையினால் எழுதும் திறன் அதிகரிக்கும். தேர்விற்கு முன்னதாக நிறைய மாதிரித்தேர்வுகளை எழுதிப் பழகுதல் நலம். எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோடெக்னாலஜி பிரிவு மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.

பெண்கள் : ஆடம்பர செலவுகளைக் கண்டு வரும் நீங்கள் பொருள் சேமிப்பின் அவசியத்தினை உணர்ந்து கொள்வீர்கள்.  உங்களை புகழ்பவர்களை நல்லவர்கள் என நம்பிவிடுவது உங்களின் பலவீனமாக உள்ளது. பிள்ளைகளின் செயல்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவீர்கள். குடும்பப் பணிகளில் பொறுப்புகளை அதிகம் சுமக்க வேண்டியிருப்பதை எண்ணி மனதில் லேசான விரக்தி தலைதூக்கும். வாழ்க்கைத்துணைவருக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவீர்கள்.

ஆரோக்யம் : உடல்நிலையில் அவ்வப்போது கவனம் கொள்ள வேண்டியது அவசியம். ஒற்றைத் தலைவலி. ஆஸ்துமா, சைனஸ், சளித் தொந்தரவுகளால் அவ்வப்போது அவதிப்பட நேரிடலாம். உடல்நிலையில் தொய்வு ஏற்படும் காலத்தில் சாதாரண காய்ச்சல்தானே என்று அலட்சியமாக இராமல் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.
தொழில் : செய்யும் தொழிலில் முன்னேற்றம் காண பல்வேறு இடைஞ்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும். தொழில்முறையில் கூடுதல் அலைச்சல் உண்டாகும். வியாபாரிகள் தொழிலை அபிவிருத்தி செய்ய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக அலைய வேண்டியிருக்கும். நஷ்டமேதுமின்றி  உங்களுக்கு வரவேண்டிய லாபம் என்பது சீரான முறையில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். உத்யோகஸ்தர்கள் அடிக்கடி தற்காலிக பணி இடமாற்றத்திற்கு ஆளாக நேரிடும். ஒரு சிலர் தங்களின் பதவி உயர்விற்காக சிறப்புப் பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி பயிலுதல் ஆகியவற்றில் ஈடுபட நேரிடும். தொழிற்சாலைப் பணியாளர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

பரிகாரம் : சந்தோஷிமாதாவை வழிபட்டு வாருங்கள்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் : பொது : மற்றவர்களை கவரும் வகையிலான பேச்சும் சிரிப்பும் உங்களுடைய மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. சனிப்பெயர்ச்சியின் துவக்கம் உங்களுக்கு இனிய முறையில் அமைந்துள்ளது. நினைத்த காரியங்களை அமைதியாக நியாயமான முறையில் சாதித்து வருவீர்கள். பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு தத்துவார்த்தமாக பதிலளித்து சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்வீர்கள்.  சிக்கலான  நேரத்தில் வார்த்தை ஜாலத்தினால் பிரச்சினையிலிருந்து வெளியே வருவீர்கள். தொழில்நுட்ப ரீதியாக உங்கள் அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும் என விரும்புவீர்கள்.

நிதி : தன ஸ்தானத்தின் நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் பொருள் வரவிற்கு பஞ்சம் இருக்காது. பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்காக சொத்து சேர்ப்பினில் ஈடுபடுவீர்கள். அதே நேரத்தில் புதியதாக சொத்துக்கள் வாங்கும்போது அவற்றினுடைய மூலப் பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ்கள் போன்ற முறையான ஆவணங்களை சரிபார்த்து வாங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தவும். சொத்து விவகாரங்களில் முன்பின் தெரியாதவர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. நேரம் நன்றாக இருந்தாலும் கடன் கொடுக்கல் வாங்கலில் எதிரிகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. கையிருப்பில் பணம் ஏதும் நிற்காது.

குடும்பம் : குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் எதிர்மறையான செயல்பாடுகளைப் போக்க அதிக முயற்சி எடுத்துக்கொள்வீர்கள். தாய்மாமன் வழி உறவினர்கள் பிரச்சினை ஏற்படுத்துவார்கள். சொத்துக்கள் பாகப்பிரிவினைக்கு உள்ளாகும். பங்காளிகளுக்கு இடையிலான வழக்கு வியாஜ்ஜியங்கள் நீதிமன்றங்களுக்கு வெளியே சமாதானத்தில் முடியும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணையோடு அவ்வப்போது கருத்துவேறுபாடு கொண்டாலும் பிரச்சினையை பெரிதாக்காமல் பேசித் தீர்த்துக்கொண்டு விடுவீர்கள், கல்வி : உங்களுக்கு போட்டியாக இருக்கும் மாணவர்களை உங்களது ஞாபக சக்தியின் துணையுடன் எளிதாக வெற்றி கொள்வீர்கள். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிரமமான சூழ்நிலை தொடரும். கம்ப்யூட்டர் துறையில் பயிலும் மாணவர்கள் நல்லதொரு முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.

பெண்கள் : அவ்வப்போது லேசான சோதனைகளை சந்திக்க வேண்டி வரும். மற்றவர்கள் பேசும் பேச்சுக்களை நம்பி குடும்பத்தாரோடு கருத்து வேறுபாடு கொள்வது நல்லது அல்ல. இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் பொறுமைசாலியாக இருந்து காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டி வரும். பொறுப்புகள் என்று வந்துவிட்டால் ஆண்களுக்கு நிகராக செயல்பட்டு வெற்றி கொள்வீர்கள்.

ஆரோக்யம் : ராகுவின் நீச பலத்தினால் உடலில் நோய்தொற்றுக்கான வாய்ப்பு உண்டு. வண்டி, வாகனங்களை இயக்குதல், மாடிப்படி ஏறுதல், உயரமான இடங்களுக்குச் செல்லுதல் போன்ற நேரத்தில் அதிக கவனம் தேவை. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவ்வப்போது உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டியது அவசியம். லாகிரி வஸ்துக்களை உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

தொழில் : உத்யோகஸ்தர்கள் அதிகம் அலையாமல் அலுவல் பணிகளை உடன்பணிபுரிவோரின் துணையுடன் சாதித்துக்கொள்வீர்கள். வருகின்ற ஜூலை மாத வாக்கில் உத்யோக ரீதியாக தற்காலிக இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரிகள் அதிக அளவு அலைச்சலை சந்தித்தாலும் குறிப்பிடத்தகுந்த தன லாபத்தினை அடைவார்கள். மளிகை பலசரக்கு வியாபாரிகள் ஏற்றமான நிலையினைக் காண்பார்கள். கூரியர், பார்சல் சர்வீஸ், லாஜிஸ்டிக்ஸ், டிராவல்ஸ் துறையினருக்கு தொழில் வளர்ச்சி என்பது சிறப்பாக அமையும்.

பரிகாரம் : சண்டிகேஸ்வரரை வழிபட சஞ்சலங்கள் தீரும்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (17.1.2023 முதல் 29.3.2025 வரை) »
temple news
அசுவினி: சனி பகவான் உங்களின் இருபத்தி மூன்றாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 : சனி பகவான் உங்களின் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் : னி பகவான் உங்களின் பத்தொன்பதாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: சனி பகவான் உங்களின் பதினேழாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் ... மேலும்
 
temple news
மகம்: சனி பகவான் உங்களின் பதினான்காவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar