Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் இருக்க.. பெருமாள் கோவில்க‌ளில் மூன்று முறை தீர்த்த‌ம் ஏன்? பெருமாள் கோவில்க‌ளில் மூன்று முறை ...
முதல் பக்கம் » துளிகள்
தச மஹாவித்யாவின் பத்து வித சக்திகள்!
எழுத்தின் அளவு:
தச மஹாவித்யாவின் பத்து வித சக்திகள்!

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2021
05:07

aதச மஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்துவிதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா.

தசமஹாவித்யா அனைத்து இடங்களிலும் இருப்பதாக கூறினேன். அதுசுவை [நவரசம்], உணர்வுகள், நவகிரகங்கள் என அனைத்து பொருளின் இயங்கு சக்தியாக இருப்பது மஹாசக்தியே. அத்தகைய மஹாசக்திகளை எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம்.

1. மாதங்கி : என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள்.

காயத்திரி மந்திரம் - மாதங்கி (அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைய)

ஓம் மாதங்க்யை வித்மஹே உச்சிஷ்ட சாண்டால்யை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்

2. புவனேஸ்வரி : மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தரவதனமும் நிறைந்தவள்.

காயத்திரி மந்திரம் - புவனேஸ்வரி தேவி

ஓம் நாராயந்யை வித்மஹே புவநேஸ்வர்யை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்

3. பகுளாமுகி : பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள். வேலாயுதம்

காயத்திரி மந்திரம் - பகளாமுகி

ஓம் பகளாமுக்யை ச வித்மஹே சதம்பின்யை ச தீமஹி தன்னோ தேவ ப்ரசோதயாத்

ஓம் ப்ரஹ்மாஸ்த்ராய வித்மஹே மஹாஸ்தம்பிணி தீமஹி தன்னோ பகளா ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே பகளாமுகி தீமஹி தன்னோ அஸ்த்ரஹ் ப்ரசோதயாத்

4. திரிபுரசுந்தரி : பதினாறு வயது கன்னிகையின் உருவைகொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம், என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்குபவள். சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது. வேலாயுதம்

காயத்திரி மந்திரம் - திரிபுரசுந்தரி

ஓம் ஐம் திரிருபுரதேவ்யை வித்மஹே க்ளீம் காமேஸ்வர்யை தீமஹி சௌஹ் தன்னோ க்ளின்னே ப்ரசோதயாத்

ஓம் ஹைம் திரிபுரதேவி வித்மஹே க்ளீம் காமேஸ்வரீ தீமஹி சௌஹ் தன்னோ க்ளின்வியை ப்ரசோதயாத்

5. தாரா : நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹாசக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.

காயத்திரி மந்திரம் - தாராதேவி

ஓம் தாராயை ச வித்மஹேமனோக்ரஹாயை தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத்

6. கமலாத்மிகா : தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும், செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லஷ்மியாக வணங்குகிறோம். வெள்ளை யானை சூழவலம் வரும் நாயகி கமலாத்மிகா.

காயத்திரி மந்திரம் - ஸ்ரீகமலாத்மிகா

ஓம் மஹாதேவ்யை ச  வித்மஹே விஷ்ணு பத்ந்யை ச  தீமஹி தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்

7. காளி : கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.

காயத்திரி மந்திரம் - காளி தேவி (கேட்ட வரம் கிடைக்க)

ஓம் காளிகாயை ச வித்மஹே ஸ்மசான வாசின்யை தீமஹி தன்னோ கோரா ப்ரசோதயாத்

8. சின்னமஸ்தா : தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்து வரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது. ஆண் – பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.

காயத்திரி மந்திரம் - சின்னமஸ்தா (எதிரிகளை வெல்ல)

ஓம் வைரேசான்யை ச வித்மஹே சின்னமஸ்தாயை ச தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்

9. தூமாவதி : கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிற ஆடையும், நகைகள் இல்லாத விரிந்த தலையும்கொண்டவள். கையில் புகை கக்கும் பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள்.

காயத்திரி மந்திரம் – தூமாவதி

ஓம் தூமாவத்யை ச வித்மஹே சம்ஹாரின்யை ச தீமஹி தன்னோ தூம ப்ரசோதயாத்

10. திரிபுரபைரவி : பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள். வேலாயுதம்

காயத்திரி மந்திரம் – திரிபுரபைரவி

ஓம் த்ரிபுராயை ச வித்மஹே பைரவ்யை ச தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்

தசமஹாவித்யாவில் ஒவ்வொரு சக்தியின் உருவங்கள் விளக்கப்பட்டாலும் நிதர்சனத்தில் இவர்களுக்கு உரு கிடையாது.

அவர்களின் செயல்களை விளக்கவே உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சக்திக்குஉரியதாக கொண்டாடப்படுகிறது. மாஹளய அமாவாசை துவங்கி பத்து நாட்களுக்கு விஜயதசமி வரை இவர்களே வணங்கப் படுகிறார்கள்.

வசந்த காலத்தை வரவேற்க நவராத்திரி கொண்டாட படுவதாக சொல்வதுண்டு. உண்மையில் இந்த மஹாசக்திகள் நம்முள் தியானிக்கபட்டால் ஒவ்வொரு நாளும் வசந்தகாலம் தானே?

உலகில் அனைத்து உருவாக்கத்திலும் மஹாசக்தியின் அம்சம் உண்டு. மஹாசக்தியை யந்திரத்தில் ஆவாகனம் செய்து மந்திரத்தால் அழைத்தால் அவர்களின் சக்தியை வெளிப்படுத்துவாள்.

மஹாசக்தியின் வரிசை அமைவுகள் தந்த்ரசாஸ்திரத்தில் ஒன்று போலவும் தேவிமஹாத்மியத் தில் வேறு அமைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு நவகிரகத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளேன்.

மஹாசக்திகளின் தொடர்புகொண்ட விஷயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. வேதசாஸ்திரம், தந்த்ரசாஸ்திரம், தேவிபாகவதம், தேவிமஹாத்மியம் மற்றும் லலிதாசஹ ஸ்ரநாமம் போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டதன் எளிய வடிவமே இது. தசாவதாரம் கூட இவளின் சக்தியாலேயே இயங்குகிறது. மஹாவித்யை குறிக்கும் பொருட்களை இது போல வரிசை ப்படுத்திக் கொண்டே செல்லலாம். இந்தநவதானியங்களில் அரிசி,கோதுமை தவிர கடலைமற்றும்பருப்புவகைகளிலும் ஒன்பது வகை உண்டு. நவராத்திரி நாளில் ஒன்பது வித்யா வாசினிகளைவழிபட்டு அவர்களுக்கு உண்டான தானியத்தை படையாலாக உட்கொள்ளும் வழக்கம் நம் சம்பிரதாயத்தில் ஒன்று. நவகன்னிகைகளை அழைத்து அவர்களின் மேல் மஹா சக்திகளை ஆவாஹனம் செய்து வழிபடும் முறையும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தசமஹாவித்யாவிற்கு தனித்தனி கோவில்கள் உண்டு. ஆதிசங்கராச்சாரியார் இதைதொடர்புகொண்டு புதிப்பித்தார் என்பது வரலாறு. ஹரித்துவாருக்கு அருகில் ‘கன்கல்’ என்ற ஊரில் இருக்கும் ஆலயத்தில் தசமஹா வித்யா அனைத்தும் யந்திரங்களுடனும்மந்திரங்களுடனும் ஸ்தாபிக்கபட்டுள்ளது. லலிதா சகஸ்ரநாமத்தில் ஸ்ரீசக்ரத்தில் அமைந்திருக்கும் மஹாசக்தியையும், மற்ற தசமஹாவித்யாக்களையும் தெரிந்து கொள்ளலாம். முறையான தீட்சை மூலம் தசமஹாவித்யா உபாசனை செய்யும் பொழுது நமது பிறவியின் நோக்கம் கைகூடும். தீட்சை பெறும் வரையில் வெளியே மஹாசக்திகளை தேடாமல் உங்கள் உள்ளே பத்து வித சக்திகளாக இருப்பவளை தியானியுங்கள். அவளே குருவாக வந்து தீட்சை தருவாள்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar