சாமியார்கள் கைகளில் திருவோடு வைத்திருப்பதை பார்த்திருபோம். அதில் அவர்கள் யாசகம் பெற்று உயிர் வாழ்வார்கள். வீடு வீடாக பிச்சை கேட்டு வரும் சாமியார்கள், கோயில்களுக்கு முன்பு அமர்ந்திருக்கும் சாமியார்களையும் பார்த்திருப்போம். அவர்களின் கைகளில் கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டி கொடுத்தது போன்று ஒரு பாத்திரம் இருக்கும். அரிசியோ, பணமோ அதில்தான் வாங்கிக் கொள்வார்கள். அதை திருவோடு, அட்சய பாத்திரம், கபாலம் என்ற பெயர்களில் அழைப்பார்கள். இந்து மத துறவிகள் உடுப்புக்கு அடுத்து கொடுக்கும் முக்கியத்துவம் திருவோட்டுக்கே. இந்த திருவோடு ஒரு மரத்தின் விதை என்றால் நம்ப முடி கிறதா? இந்த திருவோடு உலகத்திலேயே மிகப் பெரிய விதையான கடல் தேங்காயின் ஓடு. கடல் தேங்காய்க்கு நிறைய பெயர்கள் உண்டு. திருவோட்டுக்காய், இரட்டைத் தேங்காய், கடல் பனை, மாலத்தீவுத் தேங்காய் என்று. இதன் விதைகளை பாதியாக அறுத்து சுத்தம் செய்து திருவோடாக மாற்றுகிறார்கள்.
திருவோட்டுக்காய் பார்ப்பதற்கு பெரிய சைஸ் தேங்காய் போலவே இருக்கும். மரமோ பனை மரம் போல இருக்கும். இதன் பிறப்பிடம் சிசெல்ஸ் தீவுகள். இவை எல்லா இடங்களிலும் வளர்வது இல்லை. இந்தியப் பெருங்கடலில் பிரஸ்லின் என்ற தீவில்தான் அதிகமாக வளர்கிறது. இதிலும் பனை மரத்தை போலவே ஆணும், பெண்ணும் உண்டு. ஆண் மரங்கள் 6 அடி நீளம் கொண்ட பூக்களை மலர்விக்கின்றன. பெண் மரங்கள் முளைக்கத் தொடங்கி 100 வருடங்கள் கழித்தே பூக்கத் தொடங்குகின்றன. பூ மலர்ந்து காயாக மாறி முற்றுவதற்கு 10 வருடங்கள் ஆகும். காய் பெரிய தேங்காய் மாதிரி இருக்கும். நார் அடர்த்தியாக இருக்கும். ஓட்டுக்குள் உள்ள கனிப் பகுதி முதலில் பனை நுங்கு போல் இருக்கும். முற்றிய பின் தேங்காய் போல சுவைக்கும். முற்றிய காய் உதிர்ந்து கடலில் மிதந்து கரையில் ஒதுங்கும். மாலத்தீவில் ஏகப்பட்ட காய்கள் கரை ஒதுங்குகின்றன. கடல் நீரோட்டத்தின் மூலமே விதை பரவுகிறது. விதை முளைக்கத் தொடங்கி முதல் இலை தோன்றுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 90 அடி உயரம் வளர்கிறது. இதன் சுற்றளவு 12 அடி. இலைகள் விசிறி வடிவில் பனை இலை மாதிரியே இருக்கும். ஆனால், ஒரு இலை 21 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். இதன் விதை ஒன்றின் எடை 7 கிலோ முதல் 23 கிலோ வரை இருக்கும். இந்த விதை தானாக முளைத்தால்தான் உண்டு. தோட்டங்களில் முளைக்க வைக்க எவ்வளவோ முயன்றார்கள். ஒன்று கூட முளைக்க வில்லை. அப்படியே தப்பி தவறி முளைத்தாலும் வெகு சீக்கிரமே அழிந்துவிடும். திருவோடு இத்தனை சிறப்பு பெற்றது.
இந்த திருவோடு எந்த மரத்திலிருந்து கிடைக்கிறது? எந்த நாட்டைச் சேர்ந்தது என்று தெரியுமா? இந்த மரம் மெக்ஸிகன் காலாபேஷ் என்று அழைக்கப்படுகிறது. பிக்கோனியசேஸி என்ற வாகை மலர் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மரத்தின் பூர்வீகம் தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்தியஅமெரிக்காவிலிருந்து தெற்கில் உள்ள கோஸ்டா ரிக்கா வரையுள்ள பகுதிகள். இந்தியாவைச் சேர்ந்த தாவரவியலாளர் ஸ்ரீகாந்த் இங்கல்ஹலிகர், மலர்களின் பல்வகை பெருக்கத்திற்காக மெக்ஸிகன் காலாபேஷ் மரத்தை வளர்க்க ஆரம்பித்தார். புனேவில் உள்ள ஆந்த் என்னுமிடத்தில் இப்போது அது மரமாக வளர்ந்து நிற்கிறது. அத்துடன் பல்வேறு மடங்களிலும் இதனை வளர்த்து வருகின்றனர். இந்தியாவில் இந்த மரத்தின் அறிமுகம் பற்றி பேசிய இங்கல்ஹலிகார், "முக்தா கிர்லோஸ்கர் என்பவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் வைத்து வளர்த்து வந்தார். பிறகு அங்கிருந்து இடம் மாற்றப்பட்டு 500 வகையான தாவர இனங்களோடு சேர்த்து புனேவில் உள்ள தோட்டத்தில் வளர்க்கப்பட்டது. பூக்கள் இதுவொரு சிறிய மரம். 8 மீட்டர் உயரத்துக்கு வளரக்கூடியது. இந்த மரம் பெரிய மலர்களை தண்டு மற்றும்கிளைகளுக்கு அடிப்பகுதியில் கொண்டது. மாலை நேரத்தில் பூக்கள் பூத்து, நறுமணத்தை வீசும் தன்மை கொண்டது. இந்த வாசனைக்கு சிறிய வகை வௌவால்கள் வந்து, இந்த மலர்களிலிருந்து தேன் எடுத்து பூக்களின் மகரந்த சேர்க்கைக்கும் உதவுகிறது. மலரின் அமைப்பு, அளவு, நிறம், மணம், பூக்கும் நேரம் மற்றும் தேனை உமிழும் தன்மை ஆகியவற்றால் வௌவால்களை கவர்ந்து இழுக்கக்கூடிய தன்மை இந்த பூக்களுக்கு உண்டு. அதிக நறுமணமுள்ள தேனை பூக்களிலிருந்து உமிழ்வதால், வெளவால்களின் கோடை கால தாகத்தை தீர்க்கும் தன்மை இம்மரத்தின் பூக்களுக்கு உண்டு. ஓடு கடினத்தன்மை வாய்ந்த இந்த மரத்தின் பழங்கள் உடைப்பதற்கு கூட மிகக்கடினமாக இருக்கும். இதன் சுற்றளவு 7 - 10 செ.மீ. நாகலிங்க மரத்தில் இருக்கும் காய்களை போன்று தோற்றமுடையது. இந்த பழம் தன்னையே பாதுகாத்து கொள்ளும் குணாதிசயத்தை கொண்டது. இருந்தாலும் மற்ற பழங்களை போன்று நிலத்தில் போட்டால் எளிதாக வளர்ந்துவிடாது. பழத்திற்குள் இருக்கும் விதைகளை (சி-அலாட்டா) குதிரையாலோ அல்லது மனிதர்கள் எவராலுமோ சாதாரணமாக பிரித்தெடுத்துவிட முடியாது. யானையை போன்ற விலங்குகளை வைத்து முயற்சி செய்யலாம்.
விதையை மூடியுள்ள பழத்தோடு நிலத்தில் போடும்போது இது வளராது. கடினத்தன்மை வாய்ந்த ஓடுகளால் இதன் விதைகள் மூடப்பட்டுள்ளதால் காடுகளில் கூட பரந்து வளராமல் போய்விட்டது. அதனாலே இது ஒரு அரிதான மரமாகவும், மாறுபட்ட குணாதிசயத்தோடும் இருந்து வருகின்றன. மரத்திலிருந்து விழும் இந்த பழங்கள் இருக்கும் இடத்திலிருந்தே முளைக்கும் திறனை இழந்ததால், ஓரிடத்திலிருந்து இன்னொன்று பரவுவதும் அரிதாகி போனது. உள்ளூர் குதிரைகள் தன்னுடைய கால் பாதங்களால் இந்த பழத்தை உடைத்து பழத்திலிருக்கும் சதைப்பற்று மற்றும் விதைகளை சாப்பிடும் என்று இதை கவனித்தவர்கள் சொல்கின்றனர். உள்ளூர் குதிரைகளால் இந்த மர இனம் காக்கப்பட்டு நாம் பார்க்கக்கூடிய அளவில் இருந்து வருகிறது. விதைகள் இந்த மரம் ஒன்றும் அரிதான ஒன்று அல்ல. பல திறந்தவெளி இடங்கள், புல்வெளிகள், ஆடு, மாடுகள் மேயும் இடங்களில் பார்த்திருக்கலாம். இதன் காய் மற்றும் பழங்கள் உடைக்கப்பட்டு உணவு, பானங்கள் அடைக்கும் பொருள்களில் மூடியாக பயன்படுத்தப்படுகிறது. பழத்தின் கெட்டியான ஓடுகள் பிச்சைக்காரர்கள் பயன்படுத்தும் பாத்திரமாகவும் இருந்து வருகிறது. அதனாலேயே இந்த மரம் திருவோடு மரம் என்று அழைக்கப்படுகிறது. இதன் விதைகளில் காணப்படும் புரதச் சத்தோடு இணைந்த லிக்கோரைஸ், இனிப்புச் சுவை வாய்ந்தது; சாப்பிடுவதற்கு ஏற்றது. ஹோண்டுராஸ், எல்சல்வடார் மற்றும் நிகாரகுவா போன்ற லத்தீன்-அமெரிக்கா நாடுகளில் செமிலா டெ ஜிகாரோ என்ற பெயரில் உணவுபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.