Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஏழு சிரஞ்சீவிகள் .. நாளை கருட பஞ்சமியில் செய்ய வேண்டிய எளிய வழிபாடும்.. பலனும்! நாளை கருட பஞ்சமியில் செய்ய வேண்டிய ...
முதல் பக்கம் » துளிகள்
ஆடி அமாவாசையின் அற்புத ரகசியங்கள்!
எழுத்தின் அளவு:
ஆடி அமாவாசையின் அற்புத ரகசியங்கள்!

பதிவு செய்த நாள்

09 ஆக
2021
10:08

அமாவாசை என்பது *சூரியனும் சந்திரனும்* ஒன்றாக இணையும் காலம் எனப்படும்..

ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள்.

பூமி தன்னைதானே சுற்றுவதால் பூமியில் இரவு, பகல் ஏற்படுகின்றன. அத்துடன் தன்னைத் தானே சுற்றும் பூமி, சூரியனையும் சுற்றி வருவதானது நாமும் உறுண்டு கொண்டு ஆலயத்தைச் சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போன்ற நிகழ்வாகும். சந்திரன் பூமியை வலம் வருவதோடு பூமியுடன் இணைந்து சூரியனையும் சுற்றி வருவருகின்றமையால் பூமியில் திதிகள் தோன்றுகின்றன. பூமி தனது அச்சில் 23 1/2 பாகை சரிவாகச் சுற்றுவதனால் பருவகாலங்கள் உண்டாகின்றன.

சில இரவுகளில் பூமியில் உள்ளோருக்கு சந்திரனைக் காண முடிவதில்லை. காரணம் சந்திரன் பூமியைச் சுற்றுவதால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் 29.53 நாட்களுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் வருகின்றது. அப்போது பூமியில் உள்ளோருக்கு சந்திரன் தெரிவதில்லை.

வேறு விதமாக கூறுவதாயின் சந்திரன் தானாக ஒளிர்வதில்லை சூரியனின் ஒளியைப் பெற்று பிரதிபலிப்பதனால் ஒளிர்வது போல் தோற்றமளிக்கின்றது. அதனால் பூமிப்பக்கம் இருக்கும் சந்திரனின் சூரிய ஒளி படது இருப்பதனால் எம்மால் சந்திரனைப் பார்க்க முடிவதில்லை. அன்றைய தினமே அமாவாசை திதி என அழைக்கப்பெறுகின்றது.
ஆனால் சில இரவுகளில் சந்திரனின் முழுத் தோற்றத்தையும் பூமியில் உள்ளோரால் பார்க்க முடிகிறது. காரணம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சஞ்சரித்த சந்திரன் சுமார் 15 நாட்களில் பூமியின் மறுபக்கத்திற்கு சென்று விடுகின்றது,

அதாவது; சந்திரன், பூமிக்கு ஒருபக்கத்திலும், சூரியன் மறுபக்கத்திலுமாக, மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருகின்றது. இப்போது பூமியை நோக்கி இருக்கும் சந்திரனின் பகுதியில் சூரியக் கதிர்கள் பட்டு ஒளிர்கின்றது. அதனால் சந்திரன் பூமியில் உள்ளோருக்கு பிரகாசமாகத் தோற்றமளிக்கின்றது.

இந்நாளை பூரணை அல்லது பௌர்ணமி திதி என்று அழைக்கப்பெறுகின்றது.
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.

 சூரியனைப் “பிதிர் காரகன்” என்றும், சந்திரனை “மாதுர் காரகன்” என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபடிகின்றனர். அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பூரணை தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும்.

அமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாதத்திலும், ஆடி மாதத்தில்* வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு. இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர்.

தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

அதேபோல், சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் தொடக்க மாதமாக தை மாதம் அமைவதால், அந்த மாதத்தில் வரும் அமாவாசைத் திதியும் பிதுர் வழிபாட்டிற்கு சிறப்பானது எனக் கொள்ளப்படுகிறது.

ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாக இருப்பதனால், அன்றைய தினம் தந்தையை இழந்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கின்றனர். மாதுர்காரனாகிய சந்திரனும் பிதுர்காரனகிய சூரியனும் இந்து கலாச்சாரத்தில் வணங்ககூடியவர்கள்.. சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய் வழி உறவினர்கள்.

சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள்..இவர்கள் இருவரும் இணையும் அம்மாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற , தடைகள் அகல , பல வித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.

அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது..

 அம்மாவாசை அன்று மட்டும் அல்ல , தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும்.. அம்மாவாசை அன்று மட்டும் அல்லாமல் தினமும் நமது மூதாதையர்களை நினைத்து நமது வேலைகளை தொடங்குதல் வேண்டும்..

திருமணத்தடை , குழந்தை பிறப்பு தாமதம் , வறுமை , நீடித்த நோய் தொல்லை போன்றவை விலக நமது முன்னோர்களுக்கு சரியான முறைப்படி பித்ருபூஜை செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.. நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அம்மாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும் என்பது நம்பிக்கை
இன்று நமக்கு இருக்கும் நோயில்லாத வாழ்வு , நேரத்திற்கு உண்பது போன்றவை நமது முன்னோர்களின் ஆசியினால் என்பதால் அவர்களை ஆடி அம்மாவசை போன்ற காலங்களில் வணங்குவது சாலசிறந்தது..

இயற்கையாக முறையில் இறக்காமல் துர் மரணம் மூலமாக இறந்து ஆன்மா சாந்தியடையாமல் இருக்கும் ஆன்மாக்களை சரியான பித்ருபூஜைகள் மூலம் சாந்தம் கொண்டு அந்த வம்சத்திற்கு ஆசிகள் வழங்கும் என்பதால் அன்றைய தினத்தில் பித்ருபூஜை செய்வது சாலசிறந்தது
பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியம் அல்ல..காய்கறிகள் தானமாக தரவேண்டும் , குறிப்பாக பூசணிக்காய்..

ஏனெனில் அதில் தான் அசுரன் குடியிருப்பதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.. பூஜைக்கு பிறகு இல்லத்தில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி சமர்பிக்க வேண்டும்..அதன் மூலம் பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற்று நமது முன்னோர்கள் மனதார வாழ்த்துவார்கள்..

முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். முன்னோரை கஷ்டப்படுத்தினால் இறைவன் கூட நம்மை கண்டுகொள்ள மாட்டார்.. எனவே சிரமம் பார்க்காமல் ஆடி அம்மாவசை அன்று மறக்காமல் முன்னோருக்கு உங்களால் முடிந்த எளிய தர்ப்பணம் செய்து அவர்கள் அருளை பெறுங்கள்.. அதன் மூலம் தடைப்பட்ட பல காரியங்கள் எளிதாக முடிவதை காணலாம்..

ராமேஸ்வரம் , பவானி , திருச்செந்தூர் திருவையாறு போன்ற நீர் நிலைக்கு சென்று பித்ருதர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆதரவற்ற முதியோருக்கு உணவிட்டு ஏதேனும் காணிக்கை தந்து அவர்களை மகிழ்ச்சியாய் நம்மை வாயார மனதார வாழ்த்தினால் போதும்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar