நாளை கருட பஞ்சமியில் செய்ய வேண்டிய எளிய வழிபாடும்.. பலனும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2021 04:08
கருட பஞ்சமி அன்று கருடனை நோக்கி விரதமிருக்க காலையில் எழுந்து நீராடி வீட்டில் கருடனுடன் கூடிய மகாவிஷ்ணு படம் வைத்திருந்தால் அவற்றை வைத்து துளசி தீர்த்தம், காய்ச்சாத பசும்பால் மற்றும் எலுமிச்சை சாதம் ஆகிய நைவேத்தியங்களை படைத்து கீழ்வரும் கருட மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் போதும்! சகல, சவுபாக்கியங்களையும் பெறலாம். பிரிந்த தம்பதிகள் ஒன்று இணைவார்கள். மேலும் குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். பகைவர் தொல்லை ஒழியும், எமபயம் நீங்கும், வருமானம் உயரும், புத்திர பேறு உண்டாகும். கருட காயத்திரி மந்திரம்: ஓம் தத்புருஷாய வித்மஹே ஸூவர்ண பட்சாய தீமஹி தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்!