சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வரலட்சுமி விரதத்தில் அம்மனை பூஜை செய்ய பூஜாவிதானம் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள வழியையே பின்பற்றவும். அப்படிப் பின்பற்ற இயலாதவர்களுக்குச் சில எளிய பூஜா மந்திரங்கள் இதோ :திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழவருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிதுதருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே(வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)மகாலட்சுமி காயத்ரீ :ஓம் மஹாதேவ்யை ச வித்மஹேவிஷ்ணு பத்னீ ச தீமஹிதன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்அர்ச்சனை நாமாக்கள் :ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம :ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம:ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம :ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம :ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம :ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம :ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம :ஓம் அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம :ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ நம :ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம :ஓம் விஜயலக்ஷ்மியே நமோ நம :ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம :ஓம் ஜயலக்ஷ்மியே நமோ நம :ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம :ஓம் தனலக்ஷ்மியே நமோ நம :ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம :ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம :ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம :