கார்த்திகை ஒரு ஒளி மாதம். இந்த மாதத்தில் தான் சிவன் வானுக்கும், பூமிக்கும் இடையே நெருப்பு பிழம்பாகக் காட்சி தந்தார். இதையே திருவண்ணாமலையில் தீபமாக தரிசிக்கிறோம். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஒளி மிக்க நெருப்பில் இருந்து முருகப்பெருமான் பிறந்தார். அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார். இதனால் முருகன் கோயில்களில் கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை ஏற்றுவர். ஐயப்பனும் ஜோதி வடிவாக காட்சி தருபவர். எனவே ஒளியை அடிப்படையாகக் கொண்டு ஒளி மாதமான கார்த்திகையில் அவரை வணங்க மாலை அணிந்து விரதமிருக்கும் வழக்கம் உருவானது.