ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி மார்கழி மாதம் சுக்ல் பட்ச ஏகாதசியன்று நடைபெறும். இந்த ஆண்டு மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசி மார்கழி இறுதியில் வருகிறது. ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேர் திருவிழா தை மாதம் புனர்பூச நாளில் ஓடவேண்டும் என்பது நியதி. இந்த ஆண்டு புனர்பூசம் நாள் தை மாதம் 4 ந் தேதியே வந்து விடுகிறது. இதனால் வைகுந்த ஏகாதசி ஒரு மாதம் முன்னதாகவே கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்றே நடத்த வேண்டி உள்ளது. இது போன்ற நிகழ்வு 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும்.