Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: ... திருவாதிரை விரதம் இருப்பது எப்படி? திருவாதிரை விரதம் இருப்பது எப்படி?
முதல் பக்கம் » துளிகள்
ஆருத்ரா தரிசனம்: எப்படி வந்தது இந்த பெயர்!
எழுத்தின் அளவு:
ஆருத்ரா தரிசனம்: எப்படி வந்தது இந்த பெயர்!

பதிவு செய்த நாள்

17 டிச
2021
03:12

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா  சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன. சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது. ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. ஆனால், திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.


திரேதாயுகா அலறித் துடித்து பார்வதி தேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள். அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி, திரேதாயுகாவின் அலறலைக் கேட்டுஅவள் கணவனுக்குஉயிர்ப் பிச்சையளிக்கசபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒருபார்வை பார்த்தார்.


இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கும் தரிசன காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டதுசேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம் சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா தினம்.

ஆருத்ரா தினத்தன்று பிரம்ம முஹூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலையில் எழுந்து நீராடி நீறு பூச வேண்டும். பஞ்சாட்சர மந்திரத்தை நெஞ்சில் பதித்து ஓதவேண்டும். வீட்டில் நெய் விளக்கேற்றி கடவுள் படங்களுக்கு பூ வைத்து, தெரிந்து சிவ துதிகளைச் சொல்ல வேண்டும். களியும், காய்கறிக்குழம்பும் செய்து இறைவனுக்குப் படைக்கவேண்டும். பக்கத்தில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்று அங்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொண்டு ஈசனை மனதார வணங்க வேண்டும். பிறகு வீட்டுக்கு வந்து நிவேதனம் செய்து களியை உண்ணலாம். அன்று முழுவதும் வேறு எதுவும் அருந்தாமல் விரதம் காக்கவேண்டும். எப்போதும் ஈசனையே மனதில் நினைத்தபடி தியானிக்க வேண்டும்.

இந்த விரதத்தை அனுஷ்டித்ததால் தான் வியாக்கிரபாத முனிவருக்கு பாற்கடலையே பரிசாகப் பெற்று உபமன்யு என்ற மகன் கிடைத்தான். கார்க்கோடகன் என்ற பாம்பு இந்த விரதத்தை அனுஷ்டித்ததால் வானுலகம் செல்லும் பேறு பெற்றது. அந்தணர் ஒருவர் இந்த விரதத்தை முறைப்படி அனுசரித்ததால் மனித உடலுடனே வானுலகம் சென்று மீண்டும் திரும்ப வரும் பேறு பெற்றார். ஆருத்ரா தரிசனம் அன்று விரதமிருந்து ஆடல்வல்லானை வணங்கி ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் அறுத்து இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வோம்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar