இது ஸ்ரீரங்கம் பெரியகோயிலின் நான்காம் பிரகாரத்தின் கிழக்குப்பகுதியில் வருகிறது. இந்த இடத்தில்தான் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் இராப்பத்து எட்டாம் திருநாளில் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது. இது குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி நடைபோட்டு விளையாட ஏற்பட்டதென்பதும் ஒரு செய்தி. இங்குள்ள மணலை ஆண்டுக்கு ஒரு முறை புதிதாக மாற்றுகின்றனர். இந்த மணல்வெளியில் நடப்பது பாதங்களுக்கு நல்ல பயிற்சி என்பது மருத்துவ சாஸ்திரங்கள் தெரிவிக்கும் செய்தி, அத்துடன் கோயிலுக்குள் விழும் மழைநீரை உள்வாங்கி அருகில் உள்ள மடைப்பள்ளி கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறயைõமல் இருப்பதற்காகவே இது மணல்வெளியாகவே விட்டுவைக்கப்பட்டிருக்கிறது என்பதும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை.