ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் : சோறு தான் சொர்க்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2022 02:10
பசியால் வாடுபவனுக்கு சோறு இருக்குமிடம் சொர்க்கமாக இருக்கும். உணவே தெய்வம் என்பதை உலகிற்கு உணர்த்தவே ஐப்பசி பவுர்ணமியில் (நவ.8) சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் செய்வர். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் இந்த வழிபாடு சிறப்பாக நடக்கும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவு உள்ள ஆவுடையார், 13 அடி உயரமும், 23 1/2 அடி சுற்றளவும் உள்ள சிவலிங்கம் என பார்ப்பதற்கு பிரம்மாண்டான இந்த லிங்கம் இருக்கும். பக்தர்களின் பார்வையில் தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக, ஆராதனைகளுக்கு வசதியாக இரு புறங்களிலும் படிகள் உள்ளன. இங்கு 100 மூடை அரிசியை சமைத்து சோறாக்கி, ஐப்பசி பவுர்ணமியில் அபிஷேகம் செய்வர். இதை தரிசித்தால் வாழ்நாள் முழுவதும் குறைவின்றி உண்ணும் பாக்கியம் கிடைக்கும்.